வெளி மாநில போலீசார் ஊர் திரும்பினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாநில போலீசார் ஊர் திரும்பினர்

Added : ஏப் 08, 2021
Share
கடலுார்; கடலுார் மாவட்டத்திற்கு, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த வெளி மாநில போலீசார் சொந்த ஊர் திரும்பினர்.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், 1,300 துணை ராணுவத்தினர் உட்பட 5,510 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 4ம் தேதி கடலுார் வந்தனர்.

கடலுார்; கடலுார் மாவட்டத்திற்கு, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த வெளி மாநில போலீசார் சொந்த ஊர் திரும்பினர்.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், 1,300 துணை ராணுவத்தினர் உட்பட 5,510 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 4ம் தேதி கடலுார் வந்தனர். அவர்கள் கடலுார் மாவட்ட போலீசாருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தேர்தல் முடிந்ததையடுத்து, அவர்கள் நேற்று சொந்த மாநிலம் திரும்பினர். எஸ்.பி,. அலுவலகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X