பொது செய்தி

தமிழ்நாடு

நரிக்குறவர் காலனி சாலையில் முட்புதர்கள் அகற்றப்படுமா?

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி ஊராட்சி நரிக்குறவர் காலனி செல்லும் சாலையில் முட்புதர்கள் மண்டியிருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பாழ்வாய்க்கால் பஸ் நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ., தொலைவு

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி ஊராட்சி நரிக்குறவர் காலனி செல்லும் சாலையில் முட்புதர்கள் மண்டியிருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பாழ்வாய்க்கால் பஸ் நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ., தொலைவு உள்ள நரிக்குறவர் காலனிக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்துள்ளன. மேலும், அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் அப்பகுதியை கடக்க அஞ்சுகின்றனர்.இரவு நேரங்களில் குடி பிரியர்கள் அங்கு மது அருந்த வருவதால் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சியினர் சாலையில் அடர்ந்துள்ள புதர்களை அகற்றி மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என நரிக்குறவர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X