புவனகிரி; புவனகிரி, மருதுார் அருகே வடதலைக்குளத்தில் இயங்கிய துணை சுகாதார நிலையத்தை மீண்டும் துவக்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மருதுார் அடுத்த வடதலைக்குளத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இங்கு, பிரசன்னராமாபுரம், வடதலைக்குளம், தென்தலைக்குளம், உளுத்துார், அம்பாள்புரம் மற்றும் ஊடையூர் ஊராட்சிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்தனர்.போதிய ஊழியர்கள் இல்லாததால் துணை சுகாதார நிலையத்தை கிருஷ்ணாபுரத்திற்கு மாற்றினர். இதனால் துணை சுகாதார நிலைய கட்டடம் புதர் மண்டி பழுதடைந்து வருகிறது.புதர்களை அகற்றி கட்டடத்தை சீரமைத்து மீண்டும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே, பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், இங்கு பழுதடைந்த நிலையில் இருந்த தாய்சேய் நல மையம் பாதுகாப்பு கருதி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இவற்றை சொந்த கட்டடத்தில் இயங்கிட புதிய கட்டடம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE