சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதரப்பு மோதல்: 10 பேர் கைது

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திட்டக்குடி; ராமநத்தம் அருகே தேர்தல் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.ராமநத்தம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் தனவேல், 21; இவர், நேற்று முன்தினம் காலை ஓட்டு போடச் சென்ற போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் யாருக்கு ஓட்டு போட போகிறாய் என கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த அந்த கும்பல்

திட்டக்குடி; ராமநத்தம் அருகே தேர்தல் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.ராமநத்தம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் தனவேல், 21; இவர், நேற்று முன்தினம் காலை ஓட்டு போடச் சென்ற போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் யாருக்கு ஓட்டு போட போகிறாய் என கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் தனவேலைத் தாக்கியது. தடுத்த பெருமாள் என்பவரையும் தாக்கியது.படுகாயமடைந்த தனவேல், பெருமாள் இருவரும் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தொடர்ந்து மாலை, தனவேல் தரப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளை அக்கும்பல் சூறையாடியது.இரு தரப்பு புகார்களின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து சின்ராஜ், 24; சிவாஜி, 62; சரத்குமார், 28; கார்த்தி, 25; மாவீரன், 29; மாதவன், 22; பரந்தாமன், 22; மாயவன், 36; ராஜா, 52; ரஜினி, 27; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X