பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு ஆண்களை விட பெண்களே 'டாப்'

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் 76.77 சதவீதம் பதிவான நிலையில், 16 லட்சத்து 48 ஆயிரத்து 412 பேர் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்களை விட பெண்கள் 37 ஆயிரத்து 494 பேர் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 10,57,478, பெண் வாக்காளர்கள் 10,89,569, மூன்றாம் பாலினத்தவர் 248, என மொத்தம் 21,47,295 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது, 78.64 சதவீதம் ஓட்டுகள் பதிவான நிலையில் இந்த

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் 76.77 சதவீதம் பதிவான நிலையில், 16 லட்சத்து 48 ஆயிரத்து 412 பேர் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்களை விட பெண்கள் 37 ஆயிரத்து 494 பேர் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 10,57,478, பெண் வாக்காளர்கள் 10,89,569, மூன்றாம் பாலினத்தவர் 248, என மொத்தம் 21,47,295 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது, 78.64 சதவீதம் ஓட்டுகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 2 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளது.அதன்படி, நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் கடலுார் மாவட்டத்தில் 76.77 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.இதில், ஆண்கள் 8,05,415, பெண்கள் 8,42,909, மூன்றாம் பாலினத்தவர் 88, என, 16 லட்சத்து 48 ஆயிரத்து 412 பேர் ஓட்டு போட்டுள்ளனர்.ஆண்களை விட 37 ஆயிரத்து 494 பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் 76.16 சதவீமும், பெண்கள் 77.36 சதவீதம் ஓட்டளித்துள்ளனர்.தேர்தல் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக திட்டக்குடி தொகுதியில் 7௫.௬௧, விருத்தாசலம் 7௬.௯௮, நெய்வேலி 74.௦௪, பண்ருட்டி 79.6௦, கடலுார் 74.77, குறிஞ்சிப்பாடி ௮௧.௨௫, புவனகிரி 78.48, சிதம்பரம் 71.9௪, காட்டுமன்னார்கோவில் 7௫.௮௭ சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.இதில், அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் ௮௧.௨௫ சதவீதமும், குறைந்தபட்சமாக சிதம்பரத்தில் 71.9௪ சதவீதமும் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X