ஆவடியின் பல ஆண்டு பிரச்னை | Dinamalar

ஆவடியின் பல ஆண்டு பிரச்னை

Added : ஏப் 08, 2021
Share
ஆவடி; கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு, மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு என, ஆவடி மக்கள் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், சிறிதும் பெரிதுமாக, 20க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், 16 ஏரிகள், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஆவடி மாநகராட்சி பகுதியில் மட்டும் பருத்திப்பட்டு ஏரி, பாலேரிப்பட்டு ஏரி, விளிஞ்சியம்பாக்கம் ஏரி, கவரப்பாளையம் ஏரி,
 ஆவடியின் பல ஆண்டு பிரச்னை

ஆவடி; கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு, மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு என, ஆவடி மக்கள் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.

ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், சிறிதும் பெரிதுமாக, 20க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், 16 ஏரிகள், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஆவடி மாநகராட்சி பகுதியில் மட்டும் பருத்திப்பட்டு ஏரி, பாலேரிப்பட்டு ஏரி, விளிஞ்சியம்பாக்கம் ஏரி, கவரப்பாளையம் ஏரி, கோவிந்தன் தாங்கல் ஏரி, சேக்காடு பெரிய ஏரி, சித்தேரி, தண்டுரை ஏரி என, 8 ஏரிகள் உள்ளன.இந்த ஏரிகளின் உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பால், நீர்வழிப்பாதை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், மழை போதுமான அளவு பெய்தாலும், கோடையில் ஏரிகள் வறண்டு விடுகின்றன. நிலத்தடி நீர் குறைந்து ஏப்ரல், மே மாதங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால், மாநகராட்சி பகுதியில் வசிக்கும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் தினசரி தேவையான, 4.5 கோடி லிட்டர் தண்ணீரை வினியோகிக்க முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர். இதே நிலை மழைக்காலத்தில் தலைகீழாக மாறி, வெள்ள பாதிப்பு ஏற்படும் அவலம், கடந்த மூன்று ஆண்டு களாக தொடர்கிறது.முறையான மழை நீர் வடிகால்வாய் கட்டமைப்பு இல்லாததால், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. ஆனால் அதிகாரிகள், ஏற்கனவே உள்ள கால்வாய்களை கூட, பராமரித்து அகலப்படுத்த திட்டமிடுவதில்லை.அதற்கு பதில், ஆக்கிரமிப்பு கட்டடங்களை பாதிக்காதவாறு, குறுகிய அளவில் மூடிய கான்கிரீட் கால்வாய்களை அமைத்து வருகின்றனர். இந்த பணிகளும், பல ஆண்டுகளாக மந்தமாக நடந்து வருகின்றன.உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பில்லாத மழை நீர் வடிகால்வாய் என, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைப்பதில், மாநகராட்சி அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளனர்.இதனால், மழையில் வெள்ள பாதிப்பு, கோடையில் தண்ணீர் தட்டுப்பாடால், ஆவடி மக்கள் அவதியுறுவது தொடர்கிறது.ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்கும். 'கோடையில் குடிநீர் கிடைக்காது. ஒரு குடம் தண்ணீர், 10 ரூபாய் விலையில் விற்பனை நடக்கும். மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை' என்றனர்.- ஆவடியில் நடக்கும் பணிகள் ஆவடியில், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 இடங்களில் கால்வாய் சீரமைக்கும் பணி நடக்கிறது. பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் கால்வாய் சீரமைக்க, 28 கோடி ரூபாயில், பணி நடக்கிறது. ஆவடி -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், புதிதாக மழை நீர் வடிகால்வாய் அமைக்க, 49 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.நீர் கால்வாய் காணோம்ஆவடி, கவரப்பாளையத்தில் உள்ள கோவிந்தன் தாங்கல் ஏரியில் இருந்து, விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்கு, 1 கி.மீ., நீளத்தில், 10 அடி அகலத்தில், உபரி நீர் கால்வாய் இருந்தது.காலப்போக்கில் இந்த பகுதியில் சிந்துநகர், தனலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள் உருவாகின. அதிகாரிகளின் துணையோடு அந்த உபரி நீர் கால்வாய், ஆக்கிரமிப்பிற்குள்ளாகி மாயமானது.இதனால், மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற, தற்காலிக கால்வாய்கள் அமைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X