சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர், மின்சார இணைப்பு துண்டிப்பு வீட்டு உரிமையாளர் மீது பெண் புகார்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
அம்பத்துார் - வீட்டை காலி செய்யாததால், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்த, வீட்டு உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெண் ஒருவர் புகார் செய்தார்.சென்னை, அம்பத்துார், கள்ளிக்குப்பம், முருகாம்பேடு பிரதான சாலையைச் சேர்ந்தவர் முஸ்மில், 42. கணவர் சையத் முகமதுவுடன் ஏற்பட்ட பிரச்னையால், அவரை பிரிந்து, சில மாதமாக, தன் இரு மகள்களுடன் வசிக்கிறார்.இந்நிலையில்,

அம்பத்துார் - வீட்டை காலி செய்யாததால், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்த, வீட்டு உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெண் ஒருவர் புகார் செய்தார்.சென்னை, அம்பத்துார், கள்ளிக்குப்பம், முருகாம்பேடு பிரதான சாலையைச் சேர்ந்தவர் முஸ்மில், 42. கணவர் சையத் முகமதுவுடன் ஏற்பட்ட பிரச்னையால், அவரை பிரிந்து, சில மாதமாக, தன் இரு மகள்களுடன் வசிக்கிறார்.இந்நிலையில், அவர் வசிக்கும் வீட்டிற்கு, ஓராண்டாக வாடகை தரவில்லை என, வீட்டு உரிமையாளர் கோபிநாத் தரப்பில் கூறப்படுகிறது.அதனால், வீட்டை காலி செய்யுமாறு கூற, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, அம்பத்துார் போலீசார் ஓராண்டாக விசாரிக்கின்றனர். மார்ச், 17ம் தேதி விசாரணைக்குச் சென்ற முஸமில், இம்மாதம், 17ம் தேதி, வீட்டை காலி செய்து விடுவதாக எழுதிக் கொடுத்துள்ளார்.இந்நிலையில், 1ம் தேதி இரவு, அவர் குடியிருக்கும் வீட்டின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு, வீட்டு உரிமையாளர் கோபிநாத் தான் காரணம் என, மீண்டும் புகார் செய்தார்.போலீசார் விசாரித்த போது, 'சீரமைக்க நடவடிக்கை எடுக்கிறேன்' என, கோபிநாத் கூறியிருக்கிறார். ஆனால், நேற்று வரை சீரமைக்கவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து, மகள்களுடன் அடிப்படை வசதியின்றி தவிப்பதால், வரும், 17ம் தேதி வரை, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு கிடைக்க, போலீசார் உதவ வேண்டுமென, முஸமில் கோரியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X