பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் - நெல்லை இடையே விரைவு ரயில் இயக்கப்படுமா?

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
தாம்பரம்- தாம்பரம் -- நெல்லை இடையே, விரைவு ரயில் இயக்க, ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லையில் இருந்து செங்கோட்டை வரையிலான, அகல ரயில் பாதை, 1902ல் துவக்கப்பட்டது.ஆரம்ப காலத்தில், இது, 'மீட்டர்கேஜ்' ரயில் பாதையாக இருந்தது. அப்போது, சென்னையில் இருந்து கொல்லம் வரையில், இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன.பின், 110 ஆண்டுகள்

தாம்பரம்- தாம்பரம் -- நெல்லை இடையே, விரைவு ரயில் இயக்க, ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லையில் இருந்து செங்கோட்டை வரையிலான, அகல ரயில் பாதை, 1902ல் துவக்கப்பட்டது.ஆரம்ப காலத்தில், இது, 'மீட்டர்கேஜ்' ரயில் பாதையாக இருந்தது. அப்போது, சென்னையில் இருந்து கொல்லம் வரையில், இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன.பின், 110 ஆண்டுகள் கழித்து, 2012, செப்., 9ல் இது, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. அவ்வாறு, மாற்றப்பட்டு பல ஆண்டுகளான நிலையிலும், இன்று வரை, இந்த வழித்தடத்தில், விரைவு ரயில்கள் இயக்கப்படவில்லை.இதனால், சென்னையில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட, கிராமங்களுக்கு செல்வோர், திருநெல்வேலி ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து, பஸ் மாறி செல்கின்றனர்.,இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து, திருச்சி, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக, திருநெல்வேலிக்கு, 'தாமிரபரணி' விரைவு ரயில் இயக்க வேண்டும் என, தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, தென்காசியைச் சேர்ந்த, பயணி, பாண்டியராஜா, 37, என்பவர் கூறியதாவது:நுாற்றாண்டு பழமை வாய்ந்த, தாம்பரம் - நெல்லை -- தென்காசி வழித்தடம் வாயிலாக, தாமிரபரணி ரயில் இயக்கப்பட்டால், இரு மாவட்டங்களிலும், சுற்றுலா மேம்படும்.மேலும், அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளான, பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, ஆலங்குளம், கடையம், ஆழ்வார்க்குறிச்சி, பொட்டல்புதுார், முக்கூடல், அம்பை, கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த, சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்.இது, ரயில்வே நிர்வாகத்திற்கும் நல்ல வருவாயை கொடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X