பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு சதவீதம் குறைய அலட்சியமே காரணம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சென்னை--சென்னையில், ஓட்டு சதவீதம் குறைய, வாக்காளர்களின் அலட்சியமே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.தமிழகத்தின் மிகப் பெரிய தொகுதியாக, சோழிங்கநல்லுார் தொகுதி விளங்குகிறது. இங்கு, 7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த, 2016ல் மொத்த வாக்காளர்கள், 6 லட்சத்து, 24 ஆயிரத்து, 405 பேர். இதில், 3 லட்சத்து, 56 ஆயிரத்து, 424 பேர் ஓட்டளித்தனர். ஓட்டு சதவீதம், 59.17 சதவீதமாக இருந்தது.இம்முறை

சென்னை--சென்னையில், ஓட்டு சதவீதம் குறைய, வாக்காளர்களின் அலட்சியமே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.தமிழகத்தின் மிகப் பெரிய தொகுதியாக, சோழிங்கநல்லுார் தொகுதி விளங்குகிறது. இங்கு, 7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த, 2016ல் மொத்த வாக்காளர்கள், 6 லட்சத்து, 24 ஆயிரத்து, 405 பேர். இதில், 3 லட்சத்து, 56 ஆயிரத்து, 424 பேர் ஓட்டளித்தனர். ஓட்டு சதவீதம், 59.17 சதவீதமாக இருந்தது.இம்முறை தொகுதியில், 80 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ள நிலையில், மொத்த வாக்காளர்கள், 6 லட்சத்து, 94 ஆயிரத்து, 845 பேர்.இம்முறை ஓட்டு சதவீதம், 57.86 ஆக இருதந்து. இதன் மூலம், 4.02 லட்சம் பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். 2.9 லட்சம் பேர் வரை ஓட்டளிக்கவில்லை.அதேபோல, ஆலந்துார் தொகுதியில், கடந்த, 2016ல் மொத்த வாக்காளர்கள், 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 377 பேர். இதில், 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 855 பேர் ஓட்டளித்தனர். ஓட்டு சதவீதம், 61.15 சதவீதமாக இருந்தது.இம்முறை தொகுதியில், 38 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ள நிலையில், மொத்த வாக்காளர்கள், 3 லட்சத்து, 89 ஆயிரத்து, 857பேர். இம்முறை ஓட்டு சதவீதம், 60.85 சதவீதமாக இருந்தது.இதன் வாயிலாக, 2.37 லட்சம் பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். கடந்த முறையை விட ஓட்டு சதவீதம் குறைந்ததற்கு, கொரோனா தொற்று, வெயில், 'பூத் சிலிப்' என, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.ஆனால், முக்கிய காரணம், மக்களின் அலட்சிய போக்குதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமூக நல விரும்பிகள் கூறியதாவது:ஒவ்வொரு தொகுதியிலும், சராசரியாக, 40 சதவீதம் பேர் ஓட்டளிப்பதில்லை. ஆனால், அரசு இலவசமாக தரும் பணம், பொருட்களை மட்டும், 100 சதவீதம் பேர் பெறுகின்றனர். அதை விட, இது மிக முக்கியமானது என்பதை மக்கள் உணர்வதில்லை.ஒவ்வொரு முறையும், தேர்தல் கமிஷன் ஓட்டு சதவீதம் அதிகரிக்க, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால் பணம் விரையம் தான் ஆகிறது. இதனால், எந்த பலனும் கிடைப்பதில்லை.எனவே, உரிய காரணம் இன்றி, தேர்தலில் ஓட்டு போடாதவர்களை, தேச விரோதிகளாக கருத வேண்டும். அவர்களை அடையாளம் கண்டு, உரிய அபராதம், தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X