பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் அட்டை இருந்தும் 7,000 பேர் ஏமாற்றம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
துறைமுகம் - துறைமுகம் தொகுதியில் வாக்காளர் அட்டை இருந்தும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வைத்திருந்த பட்டியலில் பெயர் இல்லாததால், 7,000 பேர் ஓட்டளிக்காமல் திரும்பினர்.துறைமுகம் தொகுதியில் உள்ள, மரைக்காயர் லப்பை தெரு, பேலர் தெரு, ஆதாம் தெரு, ஆரிய பாலன் தெரு, சைவ முத்தையா தெரு உள்ளிட்ட பகுதிகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில், 1,500க்கு உட்பட்ட

துறைமுகம் - துறைமுகம் தொகுதியில் வாக்காளர் அட்டை இருந்தும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வைத்திருந்த பட்டியலில் பெயர் இல்லாததால், 7,000 பேர் ஓட்டளிக்காமல் திரும்பினர்.துறைமுகம் தொகுதியில் உள்ள, மரைக்காயர் லப்பை தெரு, பேலர் தெரு, ஆதாம் தெரு, ஆரிய பாலன் தெரு, சைவ முத்தையா தெரு உள்ளிட்ட பகுதிகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களில், 1,500க்கு உட்பட்ட நபர்களுக்கு மட்டுமே, 'பூத் சிலிப்'கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன. 90 சதவீத மக்களுக்கு, 'பூத் சிலிப்'கள் வழங்கப்படவில்லை.இவர்களுக்கு உதவி செய்யும் வகையில், த.மு.மு.க., சார்பில், 'ஓட்டர் ஹெல்ப்லைன்' ஆப் மூலமாக, வாக்காளர் அடையாள அட்டை எண் உதவியுடன், பாகம் எண், 'சீரியல்' எண் காகிதத்தில் எழுதிக் கொடுத்து ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டு போட உதவி செய்துள்ளனர்.இப்பகுதியில் உள்ள, 16 ஆயிரம் பேரில், 7,000 பேருக்கு மேல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வைத்திருக்கும் நோட்டுப்புத்தக பட்டியலில், பெயர் இல்லை. இதனால், இவர்கள் ஓட்டளிக்காமலே சென்றுள்ளனர்.இது குறித்து த.மு.மு.க., மத்திய சென்னை மாவட்ட செயலர் துறைமுகம் மீரான் கூறியதாவது:இந்த முறை மாநகராட்சி சார்பில் முறையாக, 'பூத் சிலிப்'கள் வினியோகிக்கவில்லை. கடைசி ஒரு நாளில் அவர்கள் எப்படி தொகுதி முழுவதும், 'பூத் சிலிப்'களை வினியோகிக்க முடியும்.ஓட்டுச்சாவடிகளில், 'பூத் சிலிப்' கொடுக்க அமர்த்தப்பட்ட நபர்களும், முறையாக வினியோகிக்கவில்லை.ஓட்டர் ஹெல்ப்லைன் ஆப்பில் சீரியல் எண், பாகம் எண் இருந்தும் ஓட்டுச்சாவடி அதிகாரிகளின் நோட்டில் பெயர் இல்லாததால், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை.இந்த குளறுபடிகளை எல்லாம் தேர்தல் ஆணையம் முன்பே சரி செய்திருக்க வேண்டும். ஓட்டு சதவீதம் குறைவதற்கு, இதுவே முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X