பொது செய்தி

தமிழ்நாடு

முகப்பேர் ஓட்டுச்சாவடியில் நடந்தது என்ன?

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
அம்பத்துார்- முகப்பேர் ஓட்டுச்சாவடியில் நடந்த பிரச்னை தொடர்பாக, தி.மு.க., மற்றும் அமைச்சர் பெஞ்சமின் தரப்பினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில், இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.சென்னை, மதுரவாயல் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பெஞ்சமின், நேற்று முன்தினம் காலை, 92வது வார்டு, முகப்பேர் கிழக்கு, வீரமாமுனிவர் தெரு, எம்.ஜி.ஆர்., ஆதர்ஷ் பள்ளியின்,

அம்பத்துார்- முகப்பேர் ஓட்டுச்சாவடியில் நடந்த பிரச்னை தொடர்பாக, தி.மு.க., மற்றும் அமைச்சர் பெஞ்சமின் தரப்பினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில், இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.சென்னை, மதுரவாயல் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பெஞ்சமின், நேற்று முன்தினம் காலை, 92வது வார்டு, முகப்பேர் கிழக்கு, வீரமாமுனிவர் தெரு, எம்.ஜி.ஆர்., ஆதர்ஷ் பள்ளியின், ஓட்டுச்சாவடியை பார்வையிட சென்றார். அவருடன், அ.தி.மு.க.,வினர் இருந்தனர்.ஓட்டுச்சாவடிக்கு வந்த உயர் ஜாதி பிரிவைச் சேர்ந்த பெண்களை, தி.மு.க.,வினர் அப்போது கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்கள், ஆய்வுக்கு சென்ற அமைச்சரிடம், தி.மு.க.,வினரின் செயல் குறித்து முறையிட, அது குறித்து அவர்களிடம் கேட்டபோது, இருதரப்புக்கும் பிரச்னை வெடித்தது.அப்போது, ஆவேசமடைந்த அமைச்சர் பெஞ்சமின், தி.மு.க.,வினரை ஆபாசமாக திட்டினார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.இது குறித்து, தி.மு.க.,வினர் தரப்பிலும், அமைச்சர் தரப்பிலும், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதற்கிடையே, பெண்களை ஓட்டு போட வரவிடாமல் தடுப்பதற்காக, தி.மு.க.,வினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக அமைச்சர் தரப்பில், மதுரவாயல் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டது.தி.மு.க., தரப்பில், ஆபாசமாக பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யப்பட்டது.இந்நிலையில், ஜெ.ஜெ.நகர் போலீசார், இருதரப்பு புகாரையும் பதிவு செய்து, இருதரப்பினர் மீதும், நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். யாரும் கைது செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X