சென்னை - சூலுார்பேட்டை ரயில், இன்று பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி நிலையம் அருகே, ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை சென்ட்ரல், மூர்மார்க்கெட் நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டைக்கு இன்று காலை, 9:55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எளாவூர் வரை மட்டும் இயக்கப்படும்.சூலுார்பேட்டையில் இருந்து, மதியம், 1:20 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு, இன்று இயக்க வேண்டிய மின்சார ரயில், சூலுார்பேட்டை -- எளாவூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், எளாவூர்- - சென்னை சென்ட்ரல் இடையே மட்டும் இயக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE