பூங்காவில் குப்பை அகற்றம் ; தினமலர் செய்தி எதிரொலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூங்காவில் குப்பை அகற்றம் ; தினமலர் செய்தி எதிரொலி

Added : ஏப் 08, 2021
Share
திருநீர்மலை- நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, திருநீர்மலை பூங்காவில் கொட்டப்பட்ட குப்பை, முழுதும் அகற்றப்பட்டது.பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ஜெயின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு, 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பை ஒட்டி, பூங்கா அமைப்பதற்காக, ஓ.எஸ்.ஆர்., நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தில், 2018ல், பம்மல் நகராட்சி நிர்வாகம்,

திருநீர்மலை- நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, திருநீர்மலை பூங்காவில் கொட்டப்பட்ட குப்பை, முழுதும் அகற்றப்பட்டது.பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ஜெயின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு, 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பை ஒட்டி, பூங்கா அமைப்பதற்காக, ஓ.எஸ்.ஆர்., நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தில், 2018ல், பம்மல் நகராட்சி நிர்வாகம், சுற்றுச்சுவர் கட்டி, நடைபாதை அமைத்தது. அங்கு, குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், பூங்காவின் ஒரு பகுதி, பசுமை உரக்கிடங்காக மாற்றி அமைக்கப்பட்டது. நாளடைவில், குப்பை கொட்ட துவங்கினர். இரண்டு ஆண்டுகளாக, மலைப்போல் குப்பை தேங்கியது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குடியிருப்பு வாசிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.'பூங்காவில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றவில்லை எனில், தேர்தலை புறக்கணிக்போம்' என, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.இப்பிரச்னை குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, பூங்காவில் கொட்டப்பட்ட குப்பையை, பம்மல் நகராட்சி நிர்வாகம் முழுமையாக அகற்றியது. மேலும், இனி, குப்பை கொட்ட மாட்டோம் என்று, நகராட்சி நிர்வாகம் சார்பில், கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X