பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரம் தயாரிப்பு கூடம் பொதுமக்கள் அமோக வரவேற்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருவான்மியூர்- திருவான்மியூரில் அமைக்கப்பட்ட, 'நானோ' என்ற சிறியவகை இயற்கை உரம் தயாரிப்பு கூடம், பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.சென்னை மாநகராட்சியால், குப்பையில் இருந்து, உரம், எரிவாயு, தேங்காய் நார் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க, மயானங்களில் இடம் தேர்வு செய்தாலும், துர்நாற்றம் வீசும்; சுகாதார சீர்கேடு ஏற்படும்' என,

திருவான்மியூர்- திருவான்மியூரில் அமைக்கப்பட்ட, 'நானோ' என்ற சிறியவகை இயற்கை உரம் தயாரிப்பு கூடம், பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.சென்னை மாநகராட்சியால், குப்பையில் இருந்து, உரம், எரிவாயு, தேங்காய் நார் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க, மயானங்களில் இடம் தேர்வு செய்தாலும், துர்நாற்றம் வீசும்; சுகாதார சீர்கேடு ஏற்படும்' என, சில இடங்களில், அருகில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.மக்களின் அச்சத்தை போக்க, பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களில், 'நானோ' என்ற சிறிய வகை, இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.கடந்த ஆண்டு, அடையாறு மண்டலத்தில், 182வது வார்டு, திருவான்மியூர் வார்டு அலுவலக வளாகத்தில், முதல் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டது. டயரில் பூந்தொட்டிகள், சுவரில் விழிப்புணர்வு ஓவியம், துர்நாற்றம் வீசாமல் இருக்க காற்றோட்ட வசதி போன்ற அம்சங்களுடன், கூடம் அமைக்கப்பட்டது.திருவான்மியூர் சுற்றுவட்டார பகுதிமக்கள், வீட்டில் குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையை இந்த கூடத்தில் கொடுக்கின்றனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள், நலசங்கத்தினரை அழைத்து வந்து, உரம் தயாரிப்பு தொட்டிகளை காட்டி, துர்நாற்றம் வீசாது என்பதை உறுதிப்படுத்தினர்.மேலும், பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்து காட்டவும் முடிவு செய்துள்ளனர். இதனால், 'நானோ' என்ற இயற்கை உரம் தயாரிப்பு கூடம், பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X