குரோம்பேட்டை- கோடை காலத்தை முன்னிட்டு, தீ விபத்தை உடனுக்குடன் கட்டுப்படுத்தும் விதமாக, தீயணைப்பு துறை வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.கோடை காலத்தில், தீ விபத்து எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குறிப்பாக, சாலையோரம் கொட்டப்படும் குப்பையை எரிப்பதால் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்கும். அதே போல், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் தீயை அணைப்பதிலும் கடும் சாவல்களை சந்திக்க நேரிடும்.இதை கருத்தில் கொண்டு, தாம்பரம் சானடோரியம் தீயணைப்பு துறை அலுவலகத்தில், இரண்டு பெரிய வாகனங்களும், குறுகிய சந்துகளில் சென்று தீயை அணைக்கக்கூடிய, இருசக்கர வாகனம் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு துறை ஊழியர்கள், விடுப்பு எடுக்காமல், அனைவரும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE