கோவிலம்பாக்கம்-மவுன்ட் - -மேடவாக்கம் சாலையில், வெள்ளக்கல் முதல் ஈச்சங்காடு வரை, நான்கு கிலோ மீட்டர் துாரத்திற்கு விரிக்கப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கான நில ஆர்ஜிதம் செய்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.தாம்பரம் -- வேளச்சேரி சாலையை, ஜி.எஸ்.டி., சாலையுடன் இணைக்கும் முக்கிய சாலையாக, மவுன்ட் - - மேடவாக்கம் பிரதான சாலை அமைந்து உள்ளது.பரங்கிமலை, ரயில் நிலையத்தில் இருந்து துவங்கும் இச்சாலை, ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, நன்மங்கலம், கோவிலம்பாக்கம், வெள்ளக்கல் வழியாக, மேடவாக்கத்தை இணைக்கிறது.தாம்பரம், மேடவாக்கம் கூட்டுரோடு, கீழ்க்கட்டளை, பழைய பல்லாவரம், மூவரசம்பட்டு, மடிப்பாக்கம் பகுதிகளில் இருந்து, இச்சாலை வழியாக, சென்னை நகருக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இது தவிர, தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள், இச்சாலையில் சென்று வருகின்றன.கடந்த, 20 ஆண்டுகளில், இச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இதனால், வாகன போக்குவரத்தும், பல மடங்கு அதிகரித்தது.சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 80 பிரதான சாலைகளின் தரத்தை மேம்படுத்த, 2007ல், அரசு முடிவு செய்தது.இதற்காக, மாநில நெடுஞ்சாலை துறை சார்பிலான பணிகளுக்கு, 525 கோடி ரூபாய் மதிப்பில், திட்டங்கள் தீட்டப்பட்டன.இத்திட்டங்களில் ஒன்று தான், பரங்கிமலை -- மேடவாக்கம் பிரதான சாலை, நான்கு வழிப்பாதை திட்டம். அதற்கான பணிகள், 2008ம் ஆண்டு துவக்கப்பட்டன.ஒன்பது கி.மீ., தூரம் கொண்ட, பரங்கிமலை -- மேடவாக்கம், நான்கு வழிச்சாலையும், மீடியன், 1.20 மீ., உயரம் கொண்டதாக அமைக்கப்படுகிறது.இத்திட்டப் பணிகள், ஐந்து செக்டராக பிரித்து துவக்கப்பட்டது. நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை விரிவாக்கப்பணிகள் கடந்த,1 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வந்தன. இந்நிலையில், வெள்ளக்கல் பகுதியில் இருந்து ஈச்சங்காடு வரை, நான்கு கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலை விரிவாக்கப்பணிகள் துவக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மீடியனில் இருந்து, 50 மீட்டர் துாரம் வரை, நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், சாலையின் ஒரம் மழைநீர் வடிகால் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE