தரமணி-வேளச்சேரி பகுதியை, ஓ.எம்.ஆரில் இணைக்கும், வேளச்சேரி - தரமணி பிரதான சாலை, 150 அடி அகலமுடையது. வேளச்சேரி, ஆதம்பாக்கம், கிண்டி சுற்றுவட்டார பகுதிமக்கள், எளிதாக ஓ.எம்.ஆர்., செல்ல, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.மேலும், கோயம்பேடு, தாம்பரம், பாரிமுனை, தி.நகர், கேளம்பாக்கம் போன்ற முக்கிய இடங்களில் இருந்து, வழித்தட மாநகர பேருந்துகளும், இந்த சாலை வழியாக செல்கின்றன. இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையின், இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, வேளச்சேரியில் இருந்து, திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலையில், பல கடை உரிமையாளர்கள் மேற்கூரையை, சாலையை ஆக்கிரமித்து கட்டி உள்ளனர்.மேலும், பொருட்கள் அடுக்கி வைப்பது, 'மெக்கானிக்' வாகனங்களை நிறுத்துவது என, சாலையில் பெரும் பகுதி, ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால், வாகன நெரிசலின்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடந்தாண்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.பின், அரசியல்வாதிகள் அழுத்தத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை, அதிகாரிகள் கைவிட்டனர்.வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகன ஓட்டிகள் பயணிக்க தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE