பொது செய்தி

தமிழ்நாடு

மெரினா கடற்கரைக்கு மக்கள் வருகை அதிகரிப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
தகிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, தற்போது மக்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு, அதிகம் வருகை தருகின்றனர்.தேர்தல் பரபரப்பு முடிந்து, சென்னை நகரம் பூரண அமைதியாக காட்சி தருவதால், மக்கள் வெளியில் செல்வதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.மீண்டும், கொரோனா பரவல் அச்சம் காரணமாக, தியேட்டர், மால் போன்ற ஒரு கூரைக்கு கீழ் உள்ள இடங்களுக்கு செல்வதில், மக்களிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

தகிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, தற்போது மக்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு, அதிகம் வருகை தருகின்றனர்.தேர்தல் பரபரப்பு முடிந்து, சென்னை நகரம் பூரண அமைதியாக காட்சி தருவதால், மக்கள் வெளியில் செல்வதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.மீண்டும், கொரோனா பரவல் அச்சம் காரணமாக, தியேட்டர், மால் போன்ற ஒரு கூரைக்கு கீழ் உள்ள இடங்களுக்கு செல்வதில், மக்களிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மிகப்பெரிய திறந்தவெளியுடன் காட்சிதரும் மெரினா கடற்கரையில் தஞ்சம் புகுகின்றனர்.மாலை நேரத்தில், குழந்தைகள் குடும்பம் சூழ வருகை தருவது, கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த முறை, ஏப்ரல் முதல் வாரமே உச்சம் தொட்ட வெயிலுக்கு, இதமாக இருப்பதும் மாலை நேரத்து கடற்கரை காற்று தான்.கடலில் குளிப்பது ஆபத்து என்று போலீசார் எச்சரிக்கின்றனர். ஆனாலும், அந்த எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிக்கத்தான் செய்கின்றனர்.தங்களுக்கு செலவில்லாமல், அளவற்ற சந்தோஷத்தை தருவதால், ஏழை, எளியோர், 'ஆகா... நம்ம மெரினா' என்று குதுாகலத்தோடு கூட்டம் கூட்டமாய் வருகின்றனர்
- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X