உலக அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு: அமெரிக்கா

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்:''சர்வதேச அரங்கில், இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது,'' என, அமெரிக்க அதிபரின் பருவநிலைக்கான சிறப்பு துாதர் ஜான் கெர்ரி புகழாரம் சூட்டி உள்ளார்.அமெரிக்காவில், கடந்த ஜனவரி மாதம், நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், பருவ நிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஒரு குழு அமைத்து உத்தர விட்டார். பின், அந்த குழுவுக்கான அமெரிக்க

வாஷிங்டன்:''சர்வதேச அரங்கில், இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது,'' என, அமெரிக்க அதிபரின் பருவநிலைக்கான சிறப்பு துாதர் ஜான் கெர்ரி புகழாரம் சூட்டி உள்ளார்.



latest tamil news



அமெரிக்காவில், கடந்த ஜனவரி மாதம், நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், பருவ நிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஒரு குழு அமைத்து உத்தர விட்டார். பின், அந்த குழுவுக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு துாதராக, ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த ஒரு மாநாட்டில், ஜான் கெர்ரி பங்கேற்று உரையாற்றினார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற அந்த மாநாட்டில் ஜான் கெர்ரி கூறியதாவது:சிறந்த நாடாக விளங்கும் இந்தியா, இன்று சர்வதேச அரங்கில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதர நாடுகளுடன் நல்லுறவு வைத்திருக்கும் இந்தியா எடுக்கும் தீர்க்கமான நடவடிக்கைகள், எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படும் நன்மைகளை தீர்மானிக்கும்.


latest tamil news



பருவ நிலை மாற்றம் தொடர்பான அச்சுறுத்தலுக்கு எதிராக, நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கொரோனாவுக்கு எதிராக, எப்படி நாம் நடவடிக்கைகளை எடுக்கிறோமோ, அதேபோன்ற துரிதமான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.தொழில்களில், பாலின சமத்துவத்திற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடி மற்றும் பருவ நிலை நெருக்கடியால், அதிக அளவிலான பெண்கள், மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதை நாம் நன்கு அறிவோம்.எனவே பெண்கள் தொழிலில் செழித்து வளர்ச்சியடைய, அவர்களுக்கு ஏதுவான வேலை கலாசாரத்தை நாம் கட்டமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஏப்-202107:47:23 IST Report Abuse
ஆப்பு சும்மாவா? 50000 கோடிக்கு அமெரிக்க அப்பாச்சி, 40000 கோடிக்கு ரஷ்ய ஏவுகணை, 36000 கோடிக்கு ஃப்ரான்ஸ் ரஃபல், 3000 கோடிக்கு சீனாவுக்கு சிலைன்னு வாங்கித் தள்ளி உலகப் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தியிருக்கோம்ல. உள்ளூர் பொருளாதாரம்? என்னிக்கி நல்லா இருந்திருக்கு? அதுக்கு நேருதான் காரணம். ஜான் கெர்ரி... சீக்கிரம் நோபல் பரிசுக்கு ஏற்பாடு பண்ணுங்க.
Rate this:
sankar - Nellai,இந்தியா
08-ஏப்-202112:16:45 IST Report Abuse
sankarவயிற்றெரிச்சல்...
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
08-ஏப்-202107:11:20 IST Report Abuse
Elango இந்தியாவுக்கு எதுவும் செய்ய வேண்டாம் மோடி ஒழிந்தால் தான் தூய இந்தியா கிடைக்கும் மக்களுக்கு...நீ வாய மூடிட்டு போ....
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
08-ஏப்-202110:12:28 IST Report Abuse
Dr. Suriyaஎன் பார்வையில் நாட்டை காட்டி கொடுக்க சீனாவுடன் கள்ள ஒப்பந்தம் போட்ட இத்தாலி குடும்பமும் இங்கே தெலுங்கன் தில்லுமுல்லு கொள்ளை கூட்டமும் ஒழிந்தால் இந்தியா உருப்படும் என்று தோன்றுகிறது.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X