சென்னை : ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக, 2500 ரூபாய் வழங்கியதை, பெரும்பாலான கார்டுதாரர்கள் வாங்கிய நிலையில், பலர் ஓட்டளிக்க ஆர்வம் காட்டவில்லை.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு ஜனவரியில், அரிசி ரேஷன் கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணி பை போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது. கொரோனா பரவல் மற்றும் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல், கார்டுதாரர்கள், அதிகாலை முதல் ரேஷன் கடைகள் முன் வந்து, பல மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கினர்.
குறிப்பாக, ரேஷன் பொருட்கள் வாங்காத வசதி படைத்தவர்கள் கூட, 2500 ரூபாயுடன் கூடிய பரிசு தொகுப்பை வாங்கினர். அனைத்து மாவட்டங்களிலும், 98.86 சதவீத கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பை வாங்கினர். இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க தகுதியான, 2.07 கோடி கார்டுதாரர்களில், 1.54 லட்சம் கார்டுதாரர்கள் மட்டுமே வாங்கவில்லை.

சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, நேற்று முன்தினம் நடந்தது. மொத்த வாக்காளர்களில், 72.78 சதவீத ஓட்டுக்களே பதிவாகி இருந்தன.மற்ற தொகுதிகளை எல்லாம் விட மிகவும் குறைவாக, படித்தவர்கள் அதிகம் உள்ள சென்னையில் தான், 59.06 சதவீத ஒட்டுக்கள் மட்டுமே பதிவாகின. இதன் வாயிலாக, இலவசமாக வழங்கிய, 2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க காட்டிய அதீத ஆர்வத்தை, மக்கள் ஓட்டளிக்க காட்டவில்லை என்பது, நிரூபணமாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE