ரிக் ஷா தொழிலாளி வீட்டில் அமித் ஷாவின் மதிய உணவு

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
தோம்ஜூர் : மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் ரிக் ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டனர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில் பிரசாரம் தீவிரமாக
Amit Shah, BJP, WB election 2021, அமித் ஷா, பாஜ

தோம்ஜூர் : மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் ரிக் ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில் பிரசாரம் தீவிரமாக தொடர்கிறது.

இந்நிலையில் ஹவுரா மாவட்டம் தோம்ஜூர் சட்டசபை தொகுதியின் பா.ஜ. வேட்பாளர் ரஜிப் பானர்ஜியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் நேற்று காலை பிரசாரம் செய்தனர்.


latest tamil news



பின் அங்குள்ள ஒரு ரிக் ஷா தொழிலாளி வீட்டில் அமித் ஷா, நட்டா, வேட்பாளர் ரஜிப் பானர்ஜி உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். அவர்களுக்கு சாதம், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை ரிக் ஷா தொழிலாளி குடும்பத்து பெண்கள் பரிமாறினர். ரிக் ஷா தொழிலாளியும் அவர்களுக்கு முன் அமர்ந்து தேவையானதை கேட்டு வழங்கியதுடன் அவர்கள் சாப்பிடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-ஏப்-202116:44:57 IST Report Abuse
Malick Raja 4 ஒட்டு பார்சல்.. உறுதி ,,
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஏப்-202123:27:27 IST Report Abuse
Ramesh R உலகமே ஒரு நாடக மேடை
Rate this:
Cancel
09-ஏப்-202101:19:07 IST Report Abuse
கார்த்திக் லட்சம் ரூபாய் வருமானம் வரும் வீட்டில் கூட அந்த உணவு வகைகள் இருக்காது. ஒரு ரிஷ்சா தொழிலாளி வீட்டு உணவு இது. என் கண்ணை என்னலா நம்ப முடியவில்லை. 🧐🧐🧐🧐
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X