சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு 'சீல்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தனியார் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில், 'சீல்� வைக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, மொத்தம், 10 சட்டசபை தொகுதிகள்

திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தனியார் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில், 'சீல்� வைக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, மொத்தம், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.இத்தொகுதிகளில், கடந்த, 6ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்தது. மாவட்டம் முழுதும் மொத்தம், 69.30 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.ஓட்டுப்பதிவு முடிந்ததும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூடி, சீல் வைக்கப்பட்டன.மின்னணு ஓட்டு இயந்திரங்கள் அனைத்தும், பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.அவற்றை, அங்குள்ள அறைகளில் வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த வளாகம் முழுதும் துப்பாக்கி ஏந்திய போலீசாரால் பாதுகாப்பு போடப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா, எஸ்.பி., அரவிந்தன் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் நேற்று முன்தினம் இரவு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்படும் பணியினை பார்வையிட்டனர்.கல்லுாரி வளாகம் முழுதும், 178 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அங்கு பதிவாகும் காட்சிகள், கல்லுாரி வளாகத்திற்கு வெளியில் உள்ள பெரிய திரையில் ஒளிபரப்பாகும்.வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள், சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வேட்பு மனுக்கள் எண்ணப்படும் அறைக்கு செல்லும் வகையில், தனித்தனியாக, வழி அமைக்கப்பட்டு உள்ளது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், கல்லுாரி வளாகத்திற்குள் மற்றும் வெளியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மே, 2ம் தேதி, காலை, 8:00 மணியளவில் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X