தமிழ்நாடு

இறுக்கம் தளர்ந்தது; இனிமை பிறந்தது! 'அரசியல்' மாயமாச்சு; தொழிலுக்கு திரும்பியாச்சு

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர் : ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், திருப்பூரில் தொழில்துறையில் ஈடு பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், தொழில் மீது, மீண்டும் தங்கள் கவனத்தை குவிக்க துவங்கியுள்ளனர்; இறுக்கம் தளர்ந்து, இனிமை திரும்பியது.சட்டசபை தேர்தல் ஓட் டுப்பதிவு நேற்றுமுன்தினம் முடிந்தது; திருப்பூரில், அ.தி.மு.க., - தி.மு.க., - ம.நீ.ம., - அ.ம.மு.க., - நாம் தமிழர் மற்றும் கூட்டணிக் கட்சியினர், கடந்த ஒரு
இறுக்கம் தளர்ந்தது; இனிமை பிறந்தது!  'அரசியல்' மாயமாச்சு; தொழிலுக்கு திரும்பியாச்சு

திருப்பூர் : ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், திருப்பூரில் தொழில்துறையில் ஈடு பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், தொழில் மீது, மீண்டும் தங்கள் கவனத்தை குவிக்க துவங்கியுள்ளனர்; இறுக்கம் தளர்ந்து, இனிமை திரும்பியது.

சட்டசபை தேர்தல் ஓட் டுப்பதிவு நேற்றுமுன்தினம் முடிந்தது; திருப்பூரில், அ.தி.மு.க., - தி.மு.க., - ம.நீ.ம., - அ.ம.மு.க., - நாம் தமிழர் மற்றும் கூட்டணிக் கட்சியினர், கடந்த ஒரு மாதமாக, தேர்தல் பணியில், பரபரப்புடன் செயல்பட்டனர்.ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தங்கள் பணியை நிறைவேற்றிய திருப்தியில், கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

திருப்பூரில், கட்சி பிரமுகர்களில் பலர், முழு நேர அரசியல்வாதிகள் சிலரை தவிர, மற்றவர்கள், பின்னலாடை உட்பட தொழில்துறை தொடர்பு டையவர்கள்.தேர்தலின் போது மட்டும், கட்சிப்பணிகளில் இவர்கள் ஆர்வம் காட்டுவர். ஓட்டுப்பதிவு முடிந்த கையோடு, இவர்கள் தங்கள் தொழில் மீது கவனம் செலுத்த துவங்கிவிட்டனர்.

தொழில்துறையினர் கூறியதாவது:ஒரே தொழில் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவர்கள் கூட, வெவ்வேறு கட்சிகளுக்கு, தேர்தலின் போது பணியாற்றுவதுண்டு; கட்சிப்பணிகளில் முழு கவனம் செலுத்தினால், தொழிலை திறம்பட நடத்த முடியாது. இதனால், நிர்வாகியாக இல்லாமல், தொழில்துறையினர் பலர், ஒரு கட்சியின் அபிமானியாக மட்டும் இருப்பது வழக்கம்; தேர்தல் நேரத்தில், களத்தில் இறங்கி செயல்படுவர்.

பொதுவாக, திருப்பூரில், முழு நேர அரசியல் பணியில் உள்ளவர்கள் கூட, தேர்தலின்போதுதான், அரசியல் 'முகமாக' அறியப்படுவர். தேர்தல் முடிந்ததும், கட்சி மாச்சரியங்கள், இவர்களிடம் காணாமல் போய்விடும்.தேர்தல் முடிந்ததால், ஒருவித இறுக்கத்துடன் செயல்பட்டு வந்த நிலை மாறி, அரசியல் கட்சி நிர்வாகிகளும், தொழில்துறையில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரமுகர்களும், மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர். இதுதான் திருப்பூரின் பாணி.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202103:09:38 IST Report Abuse
ஆப்பு மீண்டும் முடக்கம் வருது... பொருளாதாரம் 350 லட்சம் பில்லியன் டிரில்லியனைத் தாண்டி போகப்போகுது. உலகவங்கி பாராட்டு, அவார்டெல்லாம் வாங்கப் போறோம்.
Rate this:
Cancel
09-ஏப்-202103:09:38 IST Report Abuse
ஆப்பு மீண்டும் முடக்கம் வருது... பொருளாதாரம் 350 லட்சம் பில்லியன் டிரில்லியனைத் தாண்டி போகப்போகுது. உலகவங்கி பாராட்டு, அவார்டெல்லாம் வாங்கப் போறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X