புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை கடந்த மார்ச் 1-ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று (ஏப்.,8) காலை 2வது டோஸ் தடுப்பூசியை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பதிவில், ‛என் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டேன். வைரசை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவரும், https://www.cowin.gov.in/home தளத்தில் பதிவு செய்து, விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.' என பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE