சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலனின் தந்தை கொலை: காதலியின் பெற்றோர் கைது

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
இடைப்பாடி: புதுப்பாளையத்தில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தகராறு ஏற்பட்டது. அதில், காதலனின் தந்தை கொலை செய்யப்பட்டதால், காதலியின் பெற்றோரை, போலீசார் கைது செய்தனர். மேலும், ஒன்பது பேரை தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், புதுப்பாளையத்தை சேர்ந்த, விவசாயி தங்கவேலு, 55. இவரது மகன்கள் பெரியண்ணன், 32, பிரகாஷ், 24. இதில், லாரி டிரைவராக பணிபுரியும்

இடைப்பாடி: புதுப்பாளையத்தில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தகராறு ஏற்பட்டது. அதில், காதலனின் தந்தை கொலை செய்யப்பட்டதால், காதலியின் பெற்றோரை, போலீசார் கைது செய்தனர். மேலும், ஒன்பது பேரை தேடி வருகின்றனர்.


சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், புதுப்பாளையத்தை சேர்ந்த, விவசாயி தங்கவேலு, 55. இவரது மகன்கள் பெரியண்ணன், 32, பிரகாஷ், 24. இதில், லாரி டிரைவராக பணிபுரியும் பிரகாஷூம், அதே பகுதியை சேர்ந்த, அவரது உறவினர் செல்வத்தின் மகளான, 'நர்சிங்' படிக்கும் மாணவி சந்தியாவும் காதலித்தனர். கடந்த மாதம், 29ல், இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். நேற்று, சந்தியாவின் தந்தை செல்வம், 43, அவரது உறவினர்கள் உள்பட, 10க்கும் மேற்பட்டோர், தங்கவேலு வீட்டுக்கு வந்து, 'என் மகள் எங்கே' என கேட்டனர். அதில், இரு குடும்பம் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கத்தியால், தங்கவேலு கழுத்தில் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர், இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து விசாரித்த, கொங்கணாபுரம் போலீசார், செல்வம், அவரது மனைவி செல்வி, 41, ஆகியோரை கைது செய்தனர். அவர்களது உறவினர்களான, அய்யனார், செல்வி, சேகர், பெரியசாமி, பெரியதாயி, சுரேஷ், முருகன், ரமேஷ், தங்கவேல் ஆகியோர் மீதும் வழக்குப்பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X