பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி வழங்காததால் கரும்பு விவசாயிகள் அவதி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்த கரும்பை அரவைக்கு அனுப்புகின்றனர். சாகுபடி செய்துள்ள கரும்புக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்காததால், அவதிப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.இது

அரூர்: அரூர் அடுத்த கோபாலபுரம், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்த கரும்பை அரவைக்கு அனுப்புகின்றனர். சாகுபடி செய்துள்ள கரும்புக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்காததால், அவதிப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: நடப்பாண்டு, பெய்த கனமழையால், வரட்டாறு, வாணியாறு அணை மற்றும் ஏரி, குளம், விவசாய கிணறுகள் நிரம்பி உள்ளன. இதனால், கரும்பு சாகுபடி செய்வதில், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, கரும்பு நாற்று மற்றும் விதை கரும்புகளை, விலை கொடுத்து வாங்கி நடவு செய்துள்ளனர். வழக்கமாக, சுப்ரமணி சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், கடன் வழங்கப்படும். கரும்பு அறுவடை செய்யும்போது, கடன் தொகை பிடித்தம் செய்யப்படும். இந்நிலையில், கடந்த, இரண்டு மாதங்களாக, விவசாயிகள் கரும்பு பயிருக்கு கடன் வழங்கக்கோரி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், விண்ணப்பம் வழங்கி உள்ளனர். ஆனால், இதுவரை கடன் வழங்கப்படவில்லை. இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டால், தர்மபுரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன என, கூறுகின்றனர். தற்போது, கரும்பு பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில், கடன் வழங்காததால், அவற்றுக்கு உரமிட்டு, மேற்கொண்டு பணிகளை துவங்க முடியாமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X