பொது செய்தி

தமிழ்நாடு

கோடையால் எலுமிச்சை விலை உயர்வு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
தர்மபுரி: கோடை துவங்கிய நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், எலுமிச்சை விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், வெயிலளவு, 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் நிழலை தேடி சென்று, தங்களை குளிர்வித்து வருகின்றனர். மேலும் பலர், இயற்கை பழரசங்களை பருகி, தங்களை குளிர்வித்து வருகின்றனர். இந்நிலையில், கோடைக்கு குளிர்ச்சியை தரும்

தர்மபுரி: கோடை துவங்கிய நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், எலுமிச்சை விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில், வெயிலளவு, 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் நிழலை தேடி சென்று, தங்களை குளிர்வித்து வருகின்றனர். மேலும் பலர், இயற்கை பழரசங்களை பருகி, தங்களை குளிர்வித்து வருகின்றனர். இந்நிலையில், கோடைக்கு குளிர்ச்சியை தரும் எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில், ஒரு கிலோ எலுமிச்சை பழம், 80 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, கோடை துவங்கிய நிலையில், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு விற்ற பழம், ஏப்., முதல் நாளில், 90 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம், 110, நேற்று, 130 ரூபாய் என விற்பனையானது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால், இதை சாகுபடி செய்த விவசாயிகள் மற்றும் விற்பனை செய்வோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி உழவர் சந்தையில், ஒரு பழம், ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், இதை வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என, வெளிமார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X