தர்மபுரி: தமிழக அளவில், நடந்து முடிந்த தேர்தலின் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமான பாலக்கோடு தொகுதியில், கடந்த தேர்தலை விட ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என, ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் நேற்று முன்தினம், சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், பாலக்கோடு தொகுதியில் அதிகபட்சமாக, 87.33 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. தமிழக அளவில், அதிக ஓட்டுப்பதிவு நடந்த தொகுதியாக பாலக்கோடு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த, 2016 மற்றும் நடந்து முடிந்த, 2021 தேர்தலின் ஓட்டுப்பதிவு சதவீதம் விபரம் வருமாறு:
தொகுதி 2016 2021 குறைவு
பாலக்கோடு 88.49 87.33 1.16
பென்னாகரம் 87.61 84.26 3.35
பாப்பிரெட்டிப்பட்டி 84.9 82.1 2.8
தர்மபுரி 81.12 79.73 1.39
அரூர் 83.61 78.59 5.02
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளிலும், கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை விட, நேற்று முன்தினம் நடந்த, சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவின் சதவீதம் குறைந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE