பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தேர்தலில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகா முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்திலுள்ள, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய, ஐந்து சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தேர்தலில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகா முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்திலுள்ள, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய, ஐந்து சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த, 1,817 ஓட்டுச்சாவடிகளில், அத்தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு முடிந்த பின், அலுவலர்கள், அரசியல் கட்சி ஏஜன்டுகள் முன், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள், 'சீல்' வைக்கப்பட்டன. இதையடுத்து அவை, துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணும் மையமான, தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. இங்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகா, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட இயந்திரங்களின் எண்ணிக்கையை சரிபார்த்தார். தொடர்ந்து, தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு உள்ளிட்ட உபகரணங்கள் வைக்கப்பட்ட, அறைகளுக்கு, கார்த்திகா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஏஜன்டுகள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த அறைகளின் முன், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணும் நாளான வரும், மே, 2ல் காலை மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், அரசியல் கட்சியினர் முன்னிலையில், இந்த அறைகளின், 'சீல்' உடைக்கப்பட்டு, ஓட்டு இயந்திரங்கள், எண்ணிக்கைக்கு கொண்டு வரப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X