லாரி டயர் கழன்று வந்து மோதியதில் சிறுவன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி டயர் கழன்று வந்து மோதியதில் சிறுவன் பலி

Added : ஏப் 08, 2021
Share
கிருஷ்ணகிரி: லாரியின் ஆக்சில் துண்டாகி, பின்சக்கரம் தனியாக கழன்று ஓடி, சிறுவன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் குமார், கூலித்தொழிலாளி; இவரது மகன் கவியரசன், 10, நேற்று காலை, 6:00 மணிக்கு அண்ணா நகரிலிருந்து, பர்கூர் நோக்கி, தன் பாட்டியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையிலிருந்து,

கிருஷ்ணகிரி: லாரியின் ஆக்சில் துண்டாகி, பின்சக்கரம் தனியாக கழன்று ஓடி, சிறுவன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் குமார், கூலித்தொழிலாளி; இவரது மகன் கவியரசன், 10, நேற்று காலை, 6:00 மணிக்கு அண்ணா நகரிலிருந்து, பர்கூர் நோக்கி, தன் பாட்டியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையிலிருந்து, கேரளா நோக்கி, மீன் பாரம் ஏற்றிய மினி கண்டெய்னர் லாரி சென்றது. திடீரென லாரியின் பின்பக்க இடதுபுற டயரின் ஆக்சில் கட்டாகியதில், இரண்டு டயரும் தனியாக சாலையில் ஓடியது. அது, சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் கவியரசன் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார். லாரி சிறிது தூரம் ஓடி பின் நின்றது. லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பர்கூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X