சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல்: தி.மு.க.,வினர் 5 பேர் மீது வழக்கு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வினர் மீது, தாக்குதல் நடத்தியதாக, தி.மு.க., மேற்கு மாவட்ட துணை செயலாளர் உட்பட, 5 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஓசூர் அடுத்த பேரிகை தேர்ப்பேட்டையை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் மஞ்சுநாத், 33; இவர், நேற்று முன்தினம் மதியம், பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையம் அருகே, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வாக்காளர்களை கேட்டு

ஓசூர்: ஓசூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வினர் மீது, தாக்குதல் நடத்தியதாக, தி.மு.க., மேற்கு மாவட்ட துணை செயலாளர் உட்பட, 5 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


ஓசூர் அடுத்த பேரிகை தேர்ப்பேட்டையை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் மஞ்சுநாத், 33; இவர், நேற்று முன்தினம் மதியம், பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையம் அருகே, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வாக்காளர்களை கேட்டு கொண்டிருந்தார். அங்கு வந்த, பேரிகை தேர்ப்பேட்டையை சேர்ந்த, தி.மு.க.,வை சேர்ந்த கார்த்திக், மணி, ராஜூ, தனசேகர் ஆகியோர், அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த, பேரிகை பிராமணர் தெருவை சேர்ந்த, அ.தி.மு.க., உறுப்பினரான மற்றொரு மஞ்சுநாத், 46, அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், தி.மு.க.,வினர் நான்கு பேரும், அவரை கல்லால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக, தேர்ப்பேட்டை மஞ்சுநாத் புகாரின்படி, கார்த்திக், மணி, ராஜூ, தனசேகர் ஆகிய நான்கு பேர் மீது, பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


* ஓசூர், ராயக்கோட்டை சாலை, அ.தி.மு.க.,வை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான், 49, ராஜாஜி நகரை சேர்ந்த உதயசங்கர், பார்வதி நகரை சேர்ந்த பக்?ஷூ ஆகியோர், காமராஜ் நகரிலுள்ள அய்யப்பன் கோவில் அருகே, நேற்று முன்தினம் மாலை, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கினர். அங்கு வந்த, பார்வதி நகரை சேர்ந்த, தி.மு.க., மேற்கு மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், இரும்பு கம்பியால், அவர்கள் மூவரையும் தாக்கினார். இதில், காயமடைந்த மூவரும், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக, முஜிபூர் ரஹ்மான் புகாரின்படி, சீனிவாசன் மீது, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X