கொரோனா தடுப்பூசி பணி கிருஷ்ணகிரியில் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி பணி கிருஷ்ணகிரியில் தீவிரம்

Added : ஏப் 08, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன.,16ல், தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பின்னர், முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு, 60 வயதை கடந்தவர்களுக்கும், ஏப்.,1 முதல், 45 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன.,16ல், தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பின்னர், முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு, 60 வயதை கடந்தவர்களுக்கும், ஏப்.,1 முதல், 45 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விரிவு படுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை மொத்தமாக, 87 ஆயிரத்து, 411 பேருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவற்றில், கோவிஷீல்டு 78 ஆயிரத்து, 212 பேருக்கும், கோவேக்சின், 9,199 பேருக்கும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின், 2வது டோஸ், 4 முதல், 6 வாரங்களில் போட வேண்டும். ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியின், 2வது டோஸ், காலஅளவு, 6 முதல், 8 வாரங்களாக மாற்றப்பட்டுள்ளது. தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களை விட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X