பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து 'சீல்'

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின், ஆறு சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைத்து, 'சீல்' வைக்கப்பட்டன. அந்த அறைகளை, 24 மணி நேரமும், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு நடந்தது. பதிவான ஓட்டுப்பதிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின், ஆறு சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைத்து, 'சீல்' வைக்கப்பட்டன. அந்த அறைகளை, 24 மணி நேரமும், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு நடந்தது. பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டு எண்ணும் மையமான, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு, ஆறு தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்க, ஏற்கனவே ஆறு அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில், ஓட்டுச்சாவடி வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட், ஓட்டுப்பதிவை சரிபார்க்கும் இயந்திரம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கையெழுத்திட்ட சான்றிதழ் ஆகியவை வரிசையாக வைக்கப்பட்டன. இவற்றை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, தேர்தல் பொதுபார்வையாளர் சாரதி சென்ஷர்மா மற்றும் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், அறையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டு சாவி கொண்ட பூட்டால் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது. பின், வேட்பாளர்கள் கையெழுத்திட்ட பேப்பர், கதவின்மேல் ஒட்டப்பட்டது. இதையடுத்து, இரும்பு வலை கொண்ட கதவை, அந்த அறையின் முன் வைத்து, ஆணி அடிக்கப்பட்டது. இதேபோன்று ஆறு சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், அந்தந்த அறையில் வைத்து பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டன. ஒவ்வொரு அறையையும், இரண்டு கண்காணிப்பு கேமரா மூலம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மேலும், 'சீல்' வைக்கப்பட்டுள்ள அறையின் முன், துப்பாக்கி ஏந்திய, இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X