சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இலை மேல் வளரும் இறைச்சி

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
இறைச்சிக்காக விலங்குகளை பண்ணையில் வளர்ப்பதற்கு மாற்று வழிகள் இல்லையா? இருக்கிறது. இறைச்சியின் செல்களை ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கும், 'செல் வேளாண்மை' அவற்றில் ஒன்று. கிண்ணியில் வளரும் செல்கள், கறியாகத் திரண்டு வர, சாரம் போன்ற அமைப்பு தேவை. அதற்கு பசலைக் கீரை இலையை பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஏற்கனவே மனித இதயத் திசுக்களை வளர்க்க இந்த முறை
இலை மேல் வளரும் இறைச்சி

இறைச்சிக்காக விலங்குகளை பண்ணையில் வளர்ப்பதற்கு மாற்று வழிகள் இல்லையா? இருக்கிறது. இறைச்சியின் செல்களை ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கும், 'செல் வேளாண்மை' அவற்றில் ஒன்று. கிண்ணியில் வளரும் செல்கள், கறியாகத் திரண்டு வர, சாரம் போன்ற அமைப்பு தேவை. அதற்கு பசலைக் கீரை இலையை பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஏற்கனவே மனித இதயத் திசுக்களை வளர்க்க இந்த முறை பயன்பட்டுள்ளது. என்றாலும், அந்த முறையைக் கண்டறிந்த அமெரிக்காவின் பாஸ்டன் கல்லுாரி விஞ்ஞானிகள், இந்தத் தடவை, அதை மாட்டிறைச்சி வளர்ப்பதற்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

பசலை இலையிலுள்ள புடைத்த நரம்பு அமைப்பை மட்டும் வைத்துக்கொண்டு, அதிலுள்ள பிற நிறமிகள், செல்களை நீக்கிவிடுகின்றனர் விஞ்ஞானிகள். பிறகு, மாட்டிறைச்சியின் செல்களை வெளிறிய பசலை இலை மீது வைத்து வளர்க்கின்றனர்.

இப்படி முதல் முறையாக வளர்க்கப்பட்ட மாட்டிறைச்சி செல்கள், 14 நாட்களுக்கு பல்கிப் பெருகியது. இந்த ஆய்வை மேலும் தொடர்ந்து, இறைச்சி வளர்ச்சிக் காலத்தை அதிகரிக்க விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர். இதற்கு வேறு தாவரங்கள் உதவுமா என்றும் அவர்கள் ஆராய்கின்றனர். ஆய்வகத்தில் வளரும் இறைச்சிக்கு, ஏற்கனவே வரவேற்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
09-ஏப்-202122:59:17 IST Report Abuse
மனிதன் இதுபோன்ற உணவுகள் ,மரபணு மாற்றப்பட்ட உணவுகள் இவைகளை தவிர்ப்பதே நல்லது...இதெல்லாம் நம் ஆரோக்கியத்திற்கு கேடாகும், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வர காணரணமாகும்
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
09-ஏப்-202119:16:02 IST Report Abuse
amuthan intha irachchi vegaaa Non-vegaa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X