அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கொரோனா

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (112)
Share
Advertisement
சென்னை: திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், அந்த நேரத்தில் வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று
DMK, Duraimurugan, Corona, Covid, திமுக, பொதுச்செயலாளர், துரைமுருகன், கொரோனா, பாதிப்பு

சென்னை: திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், அந்த நேரத்தில் வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
திமுக எம்.பி., கனிமொழி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், பிபிஇ கிட் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து ஓட்டளித்து சென்றார். அவர் குணமடைந்து நேற்று (ஏப்.,7) வீடு திரும்பினார்.


latest tamil news



இந்நிலையில், திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டசபை தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசிக்கான இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் செல்வபெருந்தகை என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-ஏப்-202110:06:09 IST Report Abuse
madhavan rajan கொரோனா வந்தவர் திமுக பொருளாளர் துரைமுருகனா இல்லை கதிர் ஆனந்தின் தந்தை D துரைமுருகனா என்று சரியாக கவனிக்கவும். இல்லையென்றால் ஆர் எஸ் பாரதி வழக்கு போட்டுவிடுவார்.
Rate this:
Cancel
Rajan - chennai,இந்தியா
09-ஏப்-202107:29:27 IST Report Abuse
Rajan இவரு காசை குடோன்ல வைப்பாறு
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
09-ஏப்-202111:58:53 IST Report Abuse
Dr. Suriyaகொரானாவை எங்க வைப்பாறு.......
Rate this:
Cancel
09-ஏப்-202107:01:36 IST Report Abuse
R. SUBRAMANIAN திமுக அபார(?)வெற்றி பெறுவதற்கு ஒரு திருஷடி பரிகாரம் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X