அரவக்குறிச்சி பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கரூர்: அரவக்குறிச்சி பிரிவில், விபத்தை தடுக்கும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, மதுரை செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரவக்குறிச்சி பிரிவு வழியாக செல்ல வேண்டும். நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

கரூர்: அரவக்குறிச்சி பிரிவில், விபத்தை தடுக்கும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, மதுரை செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரவக்குறிச்சி பிரிவு வழியாக செல்ல வேண்டும். நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், கரூரில் இருந்து, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக பழநி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் செல்கின்றன. இங்கு, 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அரவக்குறிச்சி பிரிவை கடந்து செல்லும்போது, நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களால் விபத்துக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது. இதைத் தவிர்க்க, அப்பகுதியில் ரவுண்டானா அல்லது குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு, விபத்து சமயத்தில், மக்கள் சாலை மறியல் செய்தால், ரவுண்டானா அமைப்பதாக, அதிகாரிகள் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், பின்னர் அதை மறந்து விடுகின்றனர். தொடர்ந்து ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க, இங்கு ரவுண்டானா அமைக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X