பொது செய்தி

தமிழ்நாடு

திருவிழாக்களுக்கு தடை; இறுதி ஊர்வலத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதி; தமிழக அரசு உத்தரவு

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல்
Tamilnadu, Covid, Guidelines, Corona, தமிழகம், கொரோனா, கட்டுப்பாடுகள்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்:
* திருவிழா, மதக் கூட்டங்களுக்கு தடை
* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி
* பேருந்துகளில் மக்கள் நின்றுக்கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
* கோயம்பேடு உட்பட தமிழகத்தின் அனைத்து பெரிய காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை
* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி


latest tamil news
* ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி
* வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருநு்து தமிழகம் வர இ-பதிவு முறை தொடரும்
* திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி
* இறுதி ஊர்வலத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதி
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் பயணிக்க அனுமதி
* தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி
* பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகளை நடத்தலாம்
* உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், விழாக்களுக்கு அனுமதி
* உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கையில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம். உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி
* அருங்காட்சியகம், பொழுதுப்போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், உயிரியல் பூங்காக்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி
* சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
*பொது மக்கள் வெளியே சொல்லும் போதும், பொது இடங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும்
* அவசிய தேவையில்லாமல், வெளியே செல்வதை தவிர்த்து பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
*மாநகராட்சி மண்டலங்களிலும், மாவட்ட அளவிலும் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்படும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வராத வகையில் கண்காணிக்கப்படுவார்கள். அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள்.


latest tamil news


Advertisement


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வருங்கால முதல்வர் துன்பநிதி  - கோபாலநாயக்கன்பட்டி ,இந்தியா
08-ஏப்-202121:44:56 IST Report Abuse
வருங்கால முதல்வர் துன்பநிதி  தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியபோது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது...
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
08-ஏப்-202120:02:25 IST Report Abuse
தமிழ்வேள் சில்லறை வியாபார கடைகளால் மட்டும்தான் கொரோனா பரவுமா ? மொத்த வியாபார கடையிலிருந்து பரவாதா ? அரசுக்கு ஐடியா கொடுத்த அந்த அதிமேதாவி அதிகாரி யார் ? கொரோனா பரவுகிறது என்று கூவிவிட்டு எதற்கு டாஸ்மாக்கும் சினிமா தியேட்டரும் திறக்கவேண்டும் ? அவை என்ன கொரோனா தடுப்பு மையங்களா ? பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதித்தால் டூ வீலர் மற்றும் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ..வாகன நெரிசல் கொரோனாவை பரப்பாத்தா ? கணவன் மனைவி குழந்தை என மூன்று பேர் மட்டும் பயணம் செய்யும்போது இரண்டு ஆட்டோக்களா எடுக்க முடியும் ? பஸ்களில் ஸ்டாண்டிங் பாசஞ்சர் கூடாது என்றால், நமது பேருந்து ஆபரேட்டர்கள் தரையில் அமர்ந்து பயணம் செய்ய வழிசெய்வார்கள் ..இரவு நேர பஸ்களின் பயண முறை பகல் நேரத்திலும் தொடரும் ... கூமுட்டைத்தனம் எல்லைமீறி போகிறது ..காமெடியில் முடியப்போகிறது
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஏப்-202119:16:22 IST Report Abuse
தமிழவேல் இத படிக்கும்போது எனக்கு ரத்தக்கொதிப்பு வந்து கண்ணு, காது, மூக்கு வழியா இரத்தம் வருதுசார். தேர்தலப்பை கூட்டம் கட்டி பிரச்சாரம் பன்ரத மட்டுமாவது நிறுத்துங்க, வேணும்னா தெருமுனையில வண்டியை போட்டுக்கிட்டு கத்துங்கன்னு சொல்லும்போதெல்லா இந்த பொறுப்புல உள்ளவனுங்க, காதையும் சேர்த்து எல்லாத்தையும் முடிகிட்டுல்ல இருந்தானுவோ.... இப்போ எதுக்கு, குத்துது குடையிதுன்னு கதரனும் ?
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
08-ஏப்-202122:09:12 IST Report Abuse
HSRடேய் பீட்டர் தேர்தல் நேரத்தில் உங்களுக்கு முன்னாடி வாயு வாயும் பேசும் பின்னாடி வாயும் பேசும். தடை போட்டால் மாங்கா சுடலை எங்கள் வெற்றிக்கு பங்கம் என்பான்.தடை போட சுடலை போராட்டம் நடத்தி இருக்கலாமே. எங்க இருக்கேன் என்ன பேசுறேன்னே தெரியாம குழப்ப சிந்தனையிலேயே அலையுரெண்ணு பெருமையா பேட்டி குடுத்தான் சுடலை..அப்போ நீயும் எல்லாத்தையும் பொத்திக்ட்டு சுடலைக்கி ஜைஞ்சக் போட்டதானே.. இப்போ ஏன் எல்லாமும் பேசுது உனக்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X