அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு உதவிட ஒன்றிணைவோம்: ஸ்டாலின்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
சென்னை: பொதுமக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல், கொரோனா 2வது அலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுமாறு திமுக.,வினரை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் திமுக. கடந்த ஆண்டு இதே
DMK, Stalin, திமுக, ஸ்டாலின்,

சென்னை: பொதுமக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல், கொரோனா 2வது அலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுமாறு திமுக.,வினரை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் திமுக. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளை திமுக நிறைவேற்றியது.


latest tamil news



இந்த கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுக.,வின் சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள். தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட 'ஒன்றிணைவோம் வா'ருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-ஏப்-202110:04:47 IST Report Abuse
madhavan rajan எப்போதும் போல் என்பதில்தான் இடிக்கிறது. முதல்வரைப் பற்றியும் பிரதமரைப் பற்றியும் அசிங்கமாக பேசும் தலைவர்கள் கொண்ட கட்சி தொண்டர்களை மட்டும் பிறருக்கு உதவிடும் வகையில் செயல்படக் கூறுவது சிறந்த நடிப்பு.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
08-ஏப்-202123:00:01 IST Report Abuse
sankar நம்ம எப்பவுமே வரும்காலம்தான்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-ஏப்-202122:05:19 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த தத்தியால நாலுவரியாவது தமிழில் பிழை இல்லாமல் எழுத தெரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X