பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மும்பை, டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு, வார
TNGovt, TNLockdown, Corona, Covid19, TN, Tamilnadu,

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மும்பை, டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்களில் ஊரடங்கு, தியேட்டர்கள் மூடல் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டபை தேர்தல் நடந்து வந்ததால் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பாடல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 3000க்கும் அதிகமான பேர் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளது.


latest tamil newsஅதன்படி, திருவிழா, மதக் கூட்டங்களுக்கு தடை. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே செயல்பட அனுமதி. ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர், இறுதி ஊர்வலத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெளியான உடனே இந்த விவகாரம் டுவிட்டரில் #TNGovt, #TNLockdown ஆகிய ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள்...

* தேர்தல் காலத்தில் மக்களை கூட்டம் கூட்டமாக சேரவிட்டுவிட்டு, நோய்தொற்றும் அதிகமாகிவிட்ட பின்பு இப்போது கட்டுப்பாடுகள் விதிப்பதால் யாருக்கு என்ன பயன்.

* திருவிழா, மதக் கூட்டங்கள் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் டாஸ்மாக்கிற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாதது ஏனோ.


latest tamil news


* தேர்தல் முடிந்துவிட்டது. அதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தேர்தல் சமயங்களில் மட்டும் வைரஸ் பரவவில்லையா. வைரஸ் வேறு எங்கும் இல்லை, அரசியல்வாதிகளிடம் தான் உள்ளது. மக்களின் பாதுகாப்பை விட தேர்தல் முக்கியமா. எது எப்படியோ அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

* மீண்டும் ஒரு லாக்டவுன் ஸ்டார்ட்ஸ். மக்களே உஷாராக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

* அப்புறம் என்ன இனி படிப்படியாக லாக்டவுன் அமலுக்கு வந்துவிடும். பதுக்கல்காரங்கள் இப்பவே பொருட்களை பதுக்கி பின்னர் அதிக விலைக்கு விற்க தொடங்கி விடுவர்.

* இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் உள்ள ஆறுதல் என்னவென்றால் தினக்கூலிக்காரர்கள் அன்றாடம் தங்களது பணியை செய்து, தங்கள் வாழ்க்கை நடத்தி கொள்வார்கள்.

* இது பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். இந்த கட்டுப்பாடுகள் எல்லாமே வெறும் கண் துடைப்பு மட்டுமே.


latest tamil news


* மற்றுமொரு சோதனை காலத்தை கடக்க இருக்கிறோம். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் மோசமாக இருக்கும் போல் தெரிகிறது. நம்மை நாம் காத்துகொண்டு மற்றவர்களையும் காப்போம்.

* தேர்தல் பிரசாரம் கூட்டமா பண்ணலாம். ஆனால் எங்க ஊரு சித்திரை திருவிழா நடத்த கூடாது.

* போன வாரம் வரைக்கும் அவளோ கூட்டத்த கூட்டி பிரச்சாரம் நடத்திட்டு இப்ப வந்து பஸ்ல நின்னுட்டு போகக்கூடாது, திருவிழா நடத்த கூடாதுனு சொல்லிட்டு இருக்காங்க.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களையும், ஆதங்கத்தையும் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202106:27:55 IST Report Abuse
ravi chandran அய்யா ஜாலி எங்க மாமூல் வாழ்க்கை துவங்கி விட்டது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
08-ஏப்-202122:14:49 IST Report Abuse
ramkumar elections could have been postponed to next year, no harm will happen. This is right time to close down Tasmac nuisance.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
08-ஏப்-202121:06:22 IST Report Abuse
THINAKAREN KARAMANI நேற்றுவரை தலைவர்கள் நின்ற வேனைச்சுற்றி மாஸ்க் போடாத மனிதக்கூட்டம் முண்டியடித்துக் கொண்டு நெருக்கிநின்று கொண்டு இருக்கலாம். இன்று மாஸ்க் அணித்திருந்தலும்கூட பஸ்ஸில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது என்றால் என்ன நியாயம்? THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X