சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கதிரொளியை 'கடத்த' முடியுமா

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சூரிய ஒளியை 'கம்பி' வழியே சிறிது தொலைவு அனுப்ப முடியுமா? முடியும் என, சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.இதற்கென அவர்கள் உருவாக்கியுள்ள கருவியில், சூரிய ஒளியை உள்வாங்கிக் குவிக்க கண்ணாடி பந்து உள்ளது. இது குவிக்கும் சூரிய ஒளியை உள்வாங்கி அனுப்ப, கண்ணாடி இழைக் கம்பி அமைப்பு உள்ளது. சூரியனின் போக்கில் கருவியை திருப்ப இரு
 கதிரொளியை 'கடத்த' முடியுமா

சூரிய ஒளியை 'கம்பி' வழியே சிறிது தொலைவு அனுப்ப முடியுமா? முடியும் என, சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

இதற்கென அவர்கள் உருவாக்கியுள்ள கருவியில், சூரிய ஒளியை உள்வாங்கிக் குவிக்க கண்ணாடி பந்து உள்ளது. இது குவிக்கும் சூரிய ஒளியை உள்வாங்கி அனுப்ப, கண்ணாடி இழைக் கம்பி அமைப்பு உள்ளது. சூரியனின் போக்கில் கருவியை திருப்ப இரு மோட்டார்களும், ஒரு ஜி.பி.எஸ், கடிகாரம் கொண்ட ஒரு சில்லு ஆகியவையும் கருவியில் உள்ளன.

கண்ணாடி இழைக் கம்பிகள் ஒளியை கடத்தக்கூடியவை. எனவே, சூரிய ஒளியையும் அவை கடத்திச் செல்கின்றன. கும்மிருட்டு அறையில், இக் கருவி தரும் வெளிச்சம், ஒரு எல்.இ.டி., விளக்கைவிட பிரகாசமானதாக இருந்தது என்கிறார், இதன் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான, டாக்டர் சாரு கோயல். சூரிய ஒளியை கம்பி மூலம் கடத்தும் இந்தக் கருவி, நிலத்திற்கு அடியே உள்ள அறைகளுக்கு பகல் நேரத்தில் , ஒளியை அறுவடை செய்து தர பயன்படும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
11-ஏப்-202109:45:28 IST Report Abuse
pattikkaattaan எனக்கு தெரிந்து பல வருடங்களுக்கு முன்பே சூரிய ஒளியை Fiber Optics tubes மூலம் கடத்தி உள்ளிருக்கும் அறைகளுக்கு வெளிச்சம் கொடுக்கும் வசதி வந்துவிட்டது ..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஏப்-202116:36:35 IST Report Abuse
J.V. Iyer அருமை.. அருமை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X