சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

புரதமாகும் புழுக்கள்!

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மனிதர்கள், பூச்சிகளை சமைத்து உண்ணும் காலம் விரைவில் வரும் என்கின்றனர் வல்லுனர்கள். குறைந்த காலத்தில், குறைந்த செலவில், அதிக புரதச் சத்தினைத் தரக்கூடியவை பூச்சிகளே. இருந்தும், அவற்றை வளர்த்து உண்பதற்கு யாரும் தயாராக இல்லை.எனவே, செல்லப் பிராணிகளுக்கு தீனியாகவும், மீன்களுக்கு உணவாகவும் அவற்றை தயாரிக்கிறது, பிரான்சிலுள்ள 'வைன்செக்ட்' நிறுவனம். சிலவகை புழுக்களை 17
 புரதமாகும் புழுக்கள்!

மனிதர்கள், பூச்சிகளை சமைத்து உண்ணும் காலம் விரைவில் வரும் என்கின்றனர் வல்லுனர்கள். குறைந்த காலத்தில், குறைந்த செலவில், அதிக புரதச் சத்தினைத் தரக்கூடியவை பூச்சிகளே. இருந்தும், அவற்றை வளர்த்து உண்பதற்கு யாரும் தயாராக இல்லை.

எனவே, செல்லப் பிராணிகளுக்கு தீனியாகவும், மீன்களுக்கு உணவாகவும் அவற்றை தயாரிக்கிறது, பிரான்சிலுள்ள 'வைன்செக்ட்' நிறுவனம். சிலவகை புழுக்களை 17 மீட்டர் உயர அடுக்குப் பண்ணைகளில் வைன்செக்ட் வளர்க்கிறது. புழுக்களை பதப்படுத்தி, புரதப் பொடி மற்றும் எண்ணெய்களை 'வைன்செக்ட்' தயாரிக்கிறது.

செல்லப்பிராணிகளுக்கான புரதத்தை, 'வைன்மீல்' என்ற பெயரில் விற்கிறது வைன்செக்ட். மேலும், மீன்களுக்கு உணவாகவும் வைன்மீல் புரதத்தை ஐரோப்பிய யூனியன் அங்கீகரித்திருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்தகைய புதுமைகளை வரவேற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X