பழைய டயர்களை என்ன செய்வது? போக்குவரத்து துறைக்கு பயன்பட்ட பின், அவை, கட்டுமானத் துறைக்கும் பயன்படும் காலம் வந்துவிட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பழைய டயர்களை மறு சுழற்சி செய்து, 'கிராபீன்' எனப்படும் மிக வலுவான பொருளாக மாற்றியுள்ளனர்.
டயரிலிருந்து விளைந்த கிராபீனை கட்டிடங்களுக்கான கான்கிரீட் கலவையில் சேர்க்கலாம். அப்படி சேர்த்தால் அது சாதாரண கட்டுமான கலவையைவிட, கூடுதல் பலமுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த தொழில்நுட்பம் பரவினால், சுற்றுச்சூழலுக்கு இரட்டை நன்மைகள் என ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, குப்பை மேடுகளில் குவிந்து, பல ஆண்டுகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை ரப்பர் டயர்கள், அவை இத்தொழில் நுட்பத்தால் கட்டடங்கள் கட்ட பயன்படும். அடுத்து, 9 சதவீத உலக கரியமில உமிழ்விற்கு காரணமாக இருப்பது சிமென்ட் கான்கிரீட்தான்.இதன் பயன்பாடு, டயரிலிருந்து தயாராகும் கிராபீனால் வெகுவாக குறையும். டயர்கள் கட்டடங்களாக மாறினால் நல்லதுதானே?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE