பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.,8) 4 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.72 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதமிழகத்தில் இன்று (ஏப்.,8) 4,276 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.,8) 4 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.72 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news


கொரோனா தொற்று தொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாநிலத்தில் உள்ள, 260 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 85 ஆயிரத்து, 281 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அ தில், சென்னையில், 1,520; கோவையில், 427; செங்கல்பட்டில், 398; திருவள்ளூரில், 199 என, மாநிலம் முழுவதும், 4,276 பேருக்கு தொற்று உறுதியானது என கூறப்பட்டுள்ளது.



தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை


தமிழகத்தில் இன்று (ஏப்.,8) 4,276 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,15,386 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 260 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-191) மூலமாக, இன்று மட்டும் 85,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 58 ஆயிரத்து 907 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,593 பேர் ஆண்கள், 1,683 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,52,545 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,62,805 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


டிஸ்சார்ஜ்



இன்று மட்டும் 1,869 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்து 415 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 19 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் 11 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,840 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202101:03:07 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இதுல இன்னமும் ஒன்றிணைவோம் வான்னு ஊளையிடுறாரு சுடலை கான்
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - ஓட்டுக்களை விற்றவர்கள் அரசியல்வாதிகளை குறை சொல்லாதீர்கள்,இந்தியா
08-ஏப்-202121:57:45 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சென்னையிலதான் அதிகம் கமாண்டர் தூக்கி வீசுன பிச்சைக் காசுக்கு ஓடுன பயலுக இப்பம் ட்ரீட்மெண்ட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும்
Rate this:
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
08-ஏப்-202120:57:15 IST Report Abuse
த.இராஜகுமார் ஆரம்பம் இவ்ளவுநாளா குணமானவர்கள் செய்தி முதலில் பின்பு பாதிக்கப்பட்டவர்கள் செய்தி இப்போது எல்லாம் தலைகீழ். கொரானா ஒரு நாடகமே
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - ஓட்டுக்களை விற்றவர்கள் அரசியல்வாதிகளை குறை சொல்லாதீர்கள்,இந்தியா
08-ஏப்-202121:58:47 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுதிருட்டு முல்லா கும்பலுக்கு எல்லாமே நாடகமாத்தான் தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X