சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்மெல்லிய இரும்புமாங்கனீசு என்பது ஒரு வேதியியல் தனிமம். இதன் அணு எண் 25. இது இயற்கையாக கிடைக்கிறது. இது இயற்கையில் தனியாக கிடைப்பதில்லை. இரும்பு உட்பட மினரல்ஸ் உடன் இணைந்து கிடைக்கிறது. 1774ல் விஞ்ஞானிகள் முதன்முதலில் பிரித்தெடுத்தனர். இது இரும்பை போல காணப்படும். மெல்லிய இரும்பு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தியாவில் மஹராஷ்டிரா மாநிலத்தில்

அறிவியல் ஆயிரம்
மெல்லிய இரும்பு

மாங்கனீசு என்பது ஒரு வேதியியல் தனிமம். இதன் அணு எண் 25. இது இயற்கையாக கிடைக்கிறது. இது இயற்கையில் தனியாக கிடைப்பதில்லை. இரும்பு உட்பட மினரல்ஸ் உடன் இணைந்து கிடைக்கிறது. 1774ல் விஞ்ஞானிகள் முதன்முதலில் பிரித்தெடுத்தனர். இது இரும்பை போல காணப்படும். மெல்லிய இரும்பு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தியாவில் மஹராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர், பந்தரா, பாலஹாட் ஆகிய பகுதிகளில் அதிகளவில் கிடைக்கிறது. இதற்கு அடுத்ததாக மத்தியபிரதேசம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கிடைக்கிறது.

தகவல் சுரங்கம்
உயரே பறக்கும் பறவை

மத்திய ஆசியாவில் அதிகளவில் காணப்படும் வாத்து இனங்களின் ஒன்று 'பட்டைத்தலை வாத்து'. இதன் நீளம் 71 முதல் 76 செ.மீ., வரை இருக்கும். எடை 1.87 கிலோ முதல் 3.2 கிலோ வரை இருக்கும். இது மிக உயரமாக பறக்கும் பறவை இனங்களில் ஒன்று. இது சுமார் 29 ஆயிரம் அடி வரை பறக்கும் திறன் பெற்றது. எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்துக்கு சமமாக பறக்கக்கூடியது. ஒரே நேரத்தில் மூன்று முதல் எட்டு முட்டைகள் வரை இடும். தொடர்ந்து இடைநில்லாமல் 1000 கி.மீ., பறக்க வல்லது. ஏழு மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும். மணிக்கு 80 முதல் 160 கி.மீ., துாரம் வரை பறக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X