பொது செய்தி

இந்தியா

மீண்டும் சவாலான சூழல் உருவாகி வருகிறது: மோடி

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவல் நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது என பிரதமர் மோடி கூறினார். நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப். 8) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.இந்தியாவில் மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு

புதுடில்லி: கொரோனா பரவல் நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.



latest tamil news



நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப். 8) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த (ஏப்.,4 தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


latest tamil news



தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் பிரதமர் மோடி இன்று (ஏப்.8) அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷ்வர்த்தன், மஹாராஷ்டிரா, பீஹார், உத்தரபிரதேசம், ஆகிய மாநில முதல்வர்கள், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

மோடி பேசியது, " நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது. பஞ்சாப் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாகபரவி வருவது கவலை அளிக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவி ருகிறது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை எதிர்த்து போராட வேண்டும். கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாக உள்ளது. முதல் அலையை கடந்து விட்டோம். இரண்டாவது அலை யை எதிர்த்து நாம் போராட வேண்டும்.. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் சாதாரணமாக இருப்பது வேதனை அளிக்கிறது. அனைத்து சவால்கள் இருந்த போதிலும் முன்பைவிட சிறந்த வளமும் அனுபவமும் நம்மிடம் உள்ளன.

கொரோனா சூழலை சமாளிக்க உங்களின் பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்கிறேன் பெரும்பாலான மாநிலங்களில் நிர்வாகம் தளர்வடைந்து காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. 70 சதவீதம் ஆர்டி பிசிஆர் சோதனை என்பது இலக்காக இருக்க வேண்டும்.


இரவு நேர ஊரடங்கு



கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அனைவருக்கும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கண்டறிதல் கண்காணிப்பு என்பதுசிறந்த வழியாக இருக்கும். கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள் . இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகள் பற்றிய விரிவான தரவுகள் நம்மிடம் இருந்தால் அவை உயிர்களை காப்பாற்ற உதவும். நாம் முதலில் தடுப்பூசி இல்லாமல் கொரோனாவை எதிர்கொண்டோம் .இப்போது நம்மிடம் தடுப்பூசி உள்ளது.


தடுப்பூசி திருவிழா



இரவு நேர ஊரடங்கை இரவு 9மணி முதல் காலை 5 வரை அல்லது 6 மணி வரையில் அமல்படுத்தலாம் . ஏப்.,11 ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம். கொரோான தடுப்பு நடவடிக்கைகளை முறையாக அமல்படுத்தி அதனை வெற்றி கொள்வோம். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டேன் கொரோனா வராது என அலட்சியமாக இருக்க கூடாது. இவ்வாறு மோடி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
09-ஏப்-202105:52:11 IST Report Abuse
தல புராணம் மூணு மாநிலங்களில் அடிச்சி விரட்டப்பட போகிறார்கள்.. சவால் தான்..
Rate this:
Cancel
08-ஏப்-202122:41:14 IST Report Abuse
ஆப்பு ஆச்சு.. அடுத்து நடுராத்திரியில் மக்களுக்கு உதவுகிறாம்னுட்டு பேசிட்டு அடிச்சு முடக்க வேண்டியதுதான். ஆப் சப்கோ பச்சானேக்கேலியே லாக்டவுன் கியா ஜாயேகா..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-ஏப்-202122:08:31 IST Report Abuse
Ramesh Sargam சவாலான சூழலை எதிர்கொள்ள எல்லா தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டும். எதிர்கட்சியினரும் சேர்ந்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X