சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

தேர்தல் ஆணையத்தின் 'சாதனை!'

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தேர்தல் ஆணையத்தின் 'சாதனை!'சேலம் மாவட்டம், வாழப்பாடி, பூவனுார் ஊராட்சி, தாதனுாரைச் சேர்ந்தவர், 58 வயதான வெங்கடாசலம். தேர்தல் நாளன்று காலை, பூவனுார் ஓட்டுச்சாவடிக்கு, ஓட்டுப்போடச் சென்றார்.அங்கிருந்த அதிகாரிகள், 'நீங்கள் இறந்து விட்டீர்கள்... அதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து, உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது' என்றதும், அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம்,
பக்க வாத்தியம்


தேர்தல் ஆணையத்தின் 'சாதனை!'



சேலம் மாவட்டம், வாழப்பாடி, பூவனுார் ஊராட்சி, தாதனுாரைச் சேர்ந்தவர், 58 வயதான வெங்கடாசலம். தேர்தல் நாளன்று காலை, பூவனுார் ஓட்டுச்சாவடிக்கு, ஓட்டுப்போடச் சென்றார்.அங்கிருந்த அதிகாரிகள், 'நீங்கள் இறந்து விட்டீர்கள்... அதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து, உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது' என்றதும், அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம், 'உங்கள் கண் முன்னாடியே இருக்கிறேன்... என்னைப் போய், செத்து போயிட்டேன்னு சொல்லுறீங்களே...' என, கோபப்பட்டார். ஆனாலும் அவர், ஓட்டு போட முடியவில்லை.இதை கவனித்த, உள்ளூர் இளைஞர் ஒருவர், 'செத்தவங்க வந்து ஓட்டு போடுறதும்; உயிரோட இருக்கிறவரின் பெயர், இறந்தவர் பட்டியலில் இருக்குறதும், நம் தேர்தல் ஆணையம் செய்யும்,
'அற்புதங்களில்' ஒன்று...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
09-ஏப்-202119:13:17 IST Report Abuse
Anantharaman Srinivasan உயிரோட இருக்கிறவரின் பெயர், இறந்தவர் பட்டியலில் தவறாக இருக்கும் பட்சத்தில் 49பி மாதிரி ஆதார் வாக்காளர் அட்டையய் வைத்து ஓட்டளிக்க முடியாதா??
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஏப்-202106:24:05 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் ஆணையத்தின் மேல் ‘கொலைக்குற்றம்’ சாற்றி கோர்ட்டுக்குப் போகலாமே. இன்னொரு ‘தர்பார்’ தயார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X