சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தேர்தல் முடிவுக்கு பின் தே.மு.தி.க.,வில் பிரளயம்!

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
தேர்தல் முடிவுக்கு பின் தே.மு.தி.க.,வில் பிரளயம்!''உள்ளே போகவே பயப்படுறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அன்வர்பாய்.''யாரு, எங்கவே போக பயப்படுதா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சென்னை, அண்ணா சாலையில, மின் வாரிய தலைமை அலுவலகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் செயல்படுதுல்ல... இந்த வளாகத்துலயே, மின் தொடரமைப்பு கழகத்துக்காக, ஆறு மாடியில தனி

டீ கடை பெஞ்ச்


தேர்தல் முடிவுக்கு பின் தே.மு.தி.க.,வில் பிரளயம்!


''உள்ளே போகவே பயப்படுறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அன்வர்பாய்.

''யாரு, எங்கவே போக பயப்படுதா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை, அண்ணா சாலையில, மின் வாரிய தலைமை அலுவலகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் செயல்படுதுல்ல... இந்த வளாகத்துலயே, மின் தொடரமைப்பு கழகத்துக்காக, ஆறு மாடியில தனி கட்டடம் கட்டியிருக்காங்க பா...

''முழுக்க, 'ஏசி' வசதியுள்ள இந்த கட்டடத்தை, சமீபத்துல தான் திறந்தாங்க... இப்ப, கொரோனா ரெண்டாவது அலை பரவிட்டு இருக்கிற சூழல்ல, 'ஏசி' வசதியுள்ள இந்த கட்டடத்துக்குள்ள போக, அதிகாரிகள், ஊழியர்கள் அச்சப்படுறாங்க பா...

''அதே நேரத்துல, மின் வாரியம் சார்புல, ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரணும்னு சொல்லியிருக்காங்க... அதோட, ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போட்டுட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''ரஜினியோட பேசறச்சே, மலரும் நினைவுகளை பகிர்ந்திருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அவர் தான் சிவனேன்னு ஓய்வுல இருக்காரே... அவரை யாருவே தொந்தரவு செஞ்சா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''நடிகர் ரஜினிக்கு சமீபத்துல, மத்திய அரசு, 'தாதா சாகேப் பால்கே' விருது குடுத்துதோல்லியோ... இதுக்காக, அவருக்கு, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், போன் போட்டு வாழ்த்து சொல்லியிருக்கார் ஓய்...

''அப்ப, 1996ம் வருஷ சட்டசபை தேர்தல் நேரத்துல, அ.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டாம்னு சொல்றதுக்காக, அப்போதைய பிரதமர் நரசிம்மராவயும், ரஜினியையும் சந்திக்க, குமரி அனந்தன் தான் ஏற்பாடு செஞ்சார் ஓய்...

''ஆனா, ரஜினி பேச்சை மீறி, நரசிம்மராவ், அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை அமைச்சார்... இதனால, தமிழக காங்கிரஸ் உடைஞ்சு, த.மா.கா., உதயமாகி, தி.மு.க.,வோட கூட்டணி வச்சு, கருணாநிதி முதல்வரானார்... இதை எல்லாம் நினைவுபடுத்தி, குமரி அனந்தன் பேச, ரஜினி வழக்கம் போல, 'ஹாஹா'ன்னு சிரிச்சு, ஆமோதிச்சிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கொடுத்த வாக்கை காப்பாத்தணுமா, இல்லையாங்க...'' என, திடீரென கேட்டார், அந்தோணிசாமி.

''இந்த காலத்துல, நுாத்துல, 10 பேர் கூட அப்படி இருக்க மாட்டேங்கறாளே... நீர் யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தினகரன் கட்சியோட கூட்டணி அமைத்து, 60 தொகுதிகள்ல, தே.மு.தி.க., போட்டியிட்டதே... ஒவ்வொரு கட்சி தலைமையும், வேட்பாளர்களுக்கு செலவுக்கு பணம் தந்துச்சுங்க...

''ஆனா, கொரோனா பாதிப்பை காரணம் காட்டி, சுதீஷ் மொபைல் போனை 'ஆப்' பண்ணிட்டார்... விருத்தாசலம் தொகுதி பிரசாரத்துல 'பிசி'ன்னு, பிரேமலதாவும் வேட்பாளர்களை கண்டுக்கலைங்க...

''ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள், ஒவ்வொரு வேட்பாளருக்கும், தலா, 3 லட்சம் ரூபாய் தர்றதா, தலைமையில இருந்து தகவல் போயிருக்கு... ஆனா, '3 லட்சத்தை வச்சு, நாக்கு கூட வழிக்க முடியாது'ன்னு யாரும் வாங்க மறுத்துட்டாங்க...

''தேர்தல் முடிவுக்கு அப்புறம், தே.மு.தி.க.,வுல பெரிய பிரளயம் வெடிக்கும்னு சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
09-ஏப்-202119:04:08 IST Report Abuse
Anantharaman Srinivasan தேர்தல் முடிவுக்கு அப்புறம், தே.மு.தி.க.,வுல மட்டும் அல்ல. இன்னும் இரண்டு கட்சியிலும் பிரளயம் வெடிக்கும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஏப்-202116:31:27 IST Report Abuse
J.V. Iyer கேப்டன் வளர்த்த தே.மு.தி.க.வை அவர் குடும்பமே அழித்துவிட்டது.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஏப்-202106:28:00 IST Report Abuse
D.Ambujavalli சீட் வாங்கப் பறக்கும் போதும், வேட்பாளர் தேர்விலும் அக்கறை இருந்தது காசை கண்ணில் காட்டாமல் வெறுப்பேற்றினால் விரைவில் கட்சி இயற்கை முடிவு எய்தும் நிலை வந்துவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X