பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
ஏப்., 9, 1954தஞ்சாவூரில், 1954 ஏப்., 9ம் தேதி பிறந்தவர், ஆதித்யன். இயற்பெயர் டைட்டஸ். ஒலி வடிவமைப்பாளராக, திரைத்துறைக்குள் நுழைந்த இவர், 1992ல், அமரன் படம் மூலம் இசையமைப்பாளராக உயர்ந்தார்.மாமன் மகள், லக்கிமேன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பல பாடல்களை


இதே நாளில் அன்று


ஏப்., 9, 1954



தஞ்சாவூரில், 1954 ஏப்., 9ம் தேதி பிறந்தவர், ஆதித்யன். இயற்பெயர் டைட்டஸ். ஒலி வடிவமைப்பாளராக, திரைத்துறைக்குள் நுழைந்த இவர், 1992ல், அமரன் படம் மூலம் இசையமைப்பாளராக உயர்ந்தார்.மாமன் மகள், லக்கிமேன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பல பாடல்களை பாடியுள்ளார்.இந்தியா மற்றும் மலேஷியாவில், தமிழ், 'பாப்' மற்றும் 'ரீமிக்ஸ்' ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஆதித்யன் சிறந்த ஓவியரும் கூட. தனியார், 'டிவி'யில் இவர் தொகுத்து வழங்கிய சமையல் நிகழ்ச்சி, பெரும் வரவேற்பைப் பெற்றது. உடல்நலக் குறைவால், 2017 டிச., 5ம் தேதி, ஐதராபாதில், தன், 63வது வயதில் காலமானார்.இசையமைப்பாளர் ஆதித்யன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X