பொது செய்தி

இந்தியா

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடர்ந்து உயரும் வைரஸ் பாதிப்பு

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுடில்லி:மஹாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி, தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட, 12 மாநிலங்களில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை, வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:நம் நாட்டில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை
Corona Virus, Covid19, India, Tamil Nadu, தமிழகம் ,12 மாநிலங்கள், வைரஸ்

புதுடில்லி:மஹாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி, தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட, 12 மாநிலங்களில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை, வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:நம் நாட்டில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


1.29 லட்சம் பேர்

மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகா, டில்லி, தமிழகம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட, 12 மாநிலங்களில், வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும், 1.29 லட்சம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், 84.21 சதவீதம் பேர், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தர பிரதேசம், டில்லி, மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட, 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில், மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 59 ஆயிரத்து, 907 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சத்தீஸ்கரில், 10 ஆயிரத்து, 310 பேரும்; கர்நாடகாவில், 6,976 பேரும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிக பாதிப்புகளால், நம் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, ஒன்பது லட்சத்து, 10 ஆயிரத்து, 319 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் விகிதம், 7.04 சதவீதமாக சற்று உயர்ந்து காணப்படுகிறது. இதில், 55.26 சதவீதம் பேர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஒரே நாளில் அதிக பாதிப்பு

நம் நாட்டில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 789 பேர், புதிதாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 29 லட்சத்து, 28 ஆயிரத்து, 574 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், இவ்வளவு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. கடந்த, 24 மணி நேரத்தில், 685 பேர், கொரோனாவால் உயிரிழந்தனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 862 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X