கூச் பெஹர்: மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. முன்னதாக பாஜகவினர் சிலர் தன்னைத் தாக்கியதாக மம்தாவை குற்றம்சாட்டி காலில் மாவுக்கட்டு போட்டிக்கொண்டு வீல்சேரில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதேபோல தொடர்ந்து மம்தா பாஜ.,மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்துகொண்டு இருந்தார். இந்நிலையில் தற்போது மேற்கு வங்க வாக்காளர்களை சிஆர்பிஎப் வீரர்கள் பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தின் கூச் பெஹர் மாவட்டத்தில் பிரச்சார ஊர்வலத்தில் கலந்து கொண்ட மம்தா, வாக்காளர் ஒருவரை சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், பொதுமக்களை தாக்கினர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அறிவுரையின்பேரிலேயே சிஆர்பிஎப் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது பத்து குடிமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். கூட்ட நெருக்கடியில் வாக்கு செலுத்த வரும் வங்காள பெண்கள் உடலில் தகாத இடத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் உரசியதாக அவர் கூறியுள்ளார். பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சில வாக்காளர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் அரம்பேங்க் சுஜாதா மோடல் என்பவர் மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதேபோன்று மேலும் மூன்று திரிணாமூல் காங்., உறுப்பினர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE